கட்டுமானத்தில் உள்ள மற்றொரு சொகுசு அடுக்குமாடிக் கட்டிடம் சரிந்து விழுந்தது
கோலாலம்பூரின் தாமன் டேசாவில் கட்டுமானத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று பிற்பகல் இடிந்து விழுந்தது.
இதில் பல நபர்கள் சிக்கியிருக்கலாம் என்று மீட்பு பணியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
மாக்சிம் ஹோல்டிங்ஸ்/Maxim Holdings Sdn Bhd. கட்டிய இந்த கட்டிடம் “”The Address”, என்று அழைக்கப்படுகிறது என்று எட்ஜ் ப்ரோப் தெரிவித்துள்ளது.
இது ஒரு காலத்தில் தெனகா நேஷனல்/Tenaga Nasional Bhd நிலமாக இருந்த ஒரு குறுகிய நிலப்பரப்பில் கட்டப்பட்ட இக்கட்டிடம், பூர்த்தி செய்யப்பட்டால், மூன்று கோபுரங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் 30 மாடிகளைக் கொண்டிருக்கும்.
இந்நிலம், கோலாலம்பூர் மாஸ்டர் பிளான் 2020 இன் கீழ் ரிசர்வ் நிலமாகவும் பச்சை நுரையீரல் என்றழைக்கப்பட்டது. ஒரு முறை இந்த திட்டத்திற்கு எதிராக தாமன் டேசா குடியிருப்பாளர்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இருப்பினும், அவர்களின் எதிர்ப்பு செவிசாய்க்கப்படவில்லை. கோலாலம்பூர் நகராட்சிக்கு எதிரான வழக்குகளும் வெற்றிபெறவில்லை.
கடந்த ஆண்டுகளில், கோலாலம்பூரில் கட்டுமானத்தில் இருக்கும் காண்டோமினியம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள “The Pinnacle” இதேபோன்ற தலைவிதியைக் கண்டது.