கோவிட் 19 – சீனாவில் இதுவரை 1,523 இறப்புகள்
சீனாவில் 2,641 புதிய கொரோனா வைரஸ் பதிவுகளைக் கண்டு, 143 இறப்புகளை பதிவு செய்துள்ளது.
ஷாங்காய் / பெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) – சீனாவின் பிரதான நிலப்பரப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 2,600க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். விடுமுறை நாட்களில் இருந்து தலைநகருக்கு திரும்பிய மக்கள் 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2,641 புதிய பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்ட பின்னர், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 66,492 ஆக உள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை 143 அதிகரித்து 1,523ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான இறப்புகள் மத்திய ஹூபே மாகாணத்திலும், குறிப்பாக மாகாண தலைநகரான 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானிலும் நிகழ்ந்துள்ளது.
ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 139 அதிகரித்துள்ளது.
இந்த கிருமியை கட்டுப்படுத்த உதவும் வகையில் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீனா போராடி வருகிறது.
(ராய்ட்டர்ஸ்)

























