கிள்ளான் மருத்துவமனையில் 5 கோவிட்-19 பாதிப்புகள் இருப்பதாக வதந்தி

சிலாங்கூரில் உள்ள கிள்ளான் மருத்துவமனையில் ஐந்து கோவிட் -19 இன் பாதிப்புகள் இருப்பது குறித்த செய்தியை மலேசிய சுகாதார அமைச்சு (MOH) மறுத்துள்ளது.

இது, நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவைத் தொடர்ந்து நடந்தது. கிள்ளான் மருத்துவமனையில் 5 கோவிட்-19 இன் பாதிப்புகள் இருப்பதாகக் கூறி நேற்று ஐந்து விநாடி வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

“கிள்ளான் மருத்துவமனையில் ஐந்து கோவிட் -19 இன் பாதிப்புகள் இருப்பதாகக் கூறப்படும் வீடியோ முற்றிலும் தவறானது. இந்த தவறான செய்தியைப் பகிரவோ பரப்பவோ வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.