‘பக்காத்தான் நேஷனல்’ யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் டைம் ஜைனுடீன்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது, பாஸ் மற்றும் அம்னோ ஆகியவை “பக்காத்தான் நேஷனல்” என்ற கூட்டணியில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுடீன்.
வாக்காளர்கள் ஏற்கனவே தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கியிருப்பதாகவும், இப்போது அரசாங்கத்தின் மீதான பொது நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று மகாதீரின் ஆலோசகராக பணியாற்றும் டைம் கூறினார்.
பொதுமக்கள், அவர்களின் நலன் கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசாங்கம் நிலையானதாகவும் வலுவாகவும் இனி மாறும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று Sin Chew Daily/சின் செவ் டெய்லியுடன் பேசிய டைம் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் ஒரு உறுதியான அணியாகத் தெரியவில்லை என்பதால், பொதுமக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைவாகவே இருப்பதாகவும் அவர் நம்புவதாகச் சொன்னார்.
அம்னோ தலைவர் அகமதட் ஜாஹிட் ஹமிடி, மகாதீருடன் இணைந்து பணியாற்ற கட்சித் தலைவர்களிடையே ஆதரவு திரட்டுவதாக தெரியவந்த உடனேயே “பக்காத்தான் நேஷனல்” கூட்டணி பற்றிய பேச்சு எழுந்தது.
மகாதீர் மற்றும் பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் இருவரும் இதுபோன்ற ஒரு சதி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதில் பாஸ், அம்னோ மற்றும் பி.கே.ஆர் உறுப்பினர்களில் ஒரு குழு, ஆட்சி காலம் முடியும்வரை மகாதீரை பிரதமராக ஆதரிப்பதற்காக எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளில் கையெழுத்திடுகின்றனர் என்று ஊகிக்கப்பட்டது.
இதற்கிடையில், தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முந்தைய நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்துமாறு டைம் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். தொடர்ந்து நாட்டை முன்னேற்றமடையச் செய்ய செய்ய வேண்டும். இப்போது தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அமைச்சர்கள், தத்தம் செயல்திறனைக் காட்ட வேண்டும் என்றார். அமைச்சர்கள் இப்போது ஆணவம் மிக்கவர்களாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பதாகவும் தனக்கு ஏராளமான புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.
“பொதுமக்கள் இப்பொது திருப்தியாக இல்லை என்று எனக்குத் தெரிக்கறது. சில அமைச்சர்கள் ஆணவம் மிக்கவர்களாகவும் திமிர் பிடித்தவர்களாகவும் இருந்து, காது கொடுத்து கேட்கமாட்டர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதே அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது மிகவும் அணுகக்கூடியவர்களாக இருந்தனர் என்பது மக்களுன் கருத்து. அவர்கள் இப்போது ஏன் இப்படி இருக்கிறார்கள்?
“அவர்கள் ஒருபோதும் கடிதங்களுக்கு பதிலளிப்பதில்லை. அவர்கள் மிகவும் வேலையாயிருப்பதாகவும், அதனால் ஓய்வில்லை என்றும் கூறுகிறார்கள். அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன என்பது புரிகிறது. அமைச்சர்களுக்கு வேலை அதிகம் தான். ஆனால் அவர்களை தேர்ந்தெடுத்தது பொதுமக்கள் என்பதையும், பொதுமக்களுக்கு சேவை செய்யவே அவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் மறந்துவிடக் கூடாது” என்று அவர் கூறினார் .
இதனிடையே, அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல சீர்திருத்தங்களைப் பற்றிய விளக்கங்களை அளிக்க, அமைச்சர்கள் மக்களுடன் தொடர்பு முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் டைம் அரசாங்கத்தை வலியுறுத்தினார். நடைமுறைப்படுத்துவதற்கு அதிக காலம் எடுக்கும் மாற்றங்களுக்கும், மிகவும் சிக்கலானதாக இருக்கும் சீர்திருத்தங்களுக்கும் இது மிக முக்கியம், என்றார் டைம்.
“ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பத்திரிகை செயலாளர் இருக்கிறார், பத்திரிகைகளுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் விளக்க வேண்டும். முறையான தொடர்பு இல்லாததுதான் இப்போது பிரச்சினையாக உள்ளது.
“போதிய தகவல் தொடர்பு இல்லாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று என்னிடம் கூறியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.