அதிர்ஷ்டத்தின் மாற்றம்: பெர்சத்து வாக்கெடுப்பில் மாஸ்லீ வெற்றி பெற்றார்
முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா/Parti Pribumi Bersatu Malaysia (Bersatu) சிம்பாங் ரெங்கம் பிரிவு தலைமை பதவியை வென்றுள்ளார்.
மஸ்லீ 211 வாக்குகளைப் பெற்று, அவரின் ஒரே எதிராளி அகமட் அஹேம் 79 வாக்குகளைப் பெற்றார்.
“அல்ஹம்துலில்லாஹ். கடவுளின் கிருபை என்னை வெல்ல அனுமதித்துள்ளது. என்னை பெர்சத்து சிம்பாங் ரெங்கம் பிரிவு தலைவராக தேர்வு செய்தமைக்கு எனது தோழர்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்று மஸ்லீ தனது ட்விட்டரில் எழுதினார்.
கல்வி அமைச்சராக பல கொள்கை விவகாரங்களில் மக்களின் அதிருப்திக்கு ஆளான மாஸ்லீயின் அரசியல் அதிர்ஷ்டம் கடந்த ஆண்டு குறைந்து கொண்டே இருந்தது.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் ஆலோசனையின் பேரில் ஜனவரி 2ம் தேதி மஸ்லீ அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.