கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகள் செயல்படத் தொடங்கியுள்ளன

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகள் செயல்படத் தொடங்கியுள்ளன

ஷாங்காய் / பெய்ஜிங் – சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அதன் பரவலைத் தடுப்பதற்கான தீவிர முயற்சிகள் செயல்படத் தொடங்கியுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ், மத்திய சீன மாகாணமான ஹூபேயில் உள்ள வனவிலங்கு சந்தையில் பரவியதாக நம்பப்படுகிறது. இதனால், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.

சீனாவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 68,500 தொற்றுநோய்களையும் 1,665 இறப்புகளையும் காட்டியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஹூபேயில் நிகழ்ந்துள்ளன.

தேசிய சுகாதார ஆணையம், ஞாயிற்றுக்கிழமை 2,009 புதிய பாதிப்புகளையும் 142 புதிய இறப்புகளையும் பதிவாக்கியுள்ளது. இது முந்தைய நாள் 2,641 பாதிப்புகளையும் 143 இறப்புகளையும் பதிவாக்கி இருந்தது. புதிய இறப்புகளில் நான்கு தவிர மற்ற அனைத்தும் ஹூபேயில் நிகழ்ந்துள்ளன.

மாகாணமும் அதன் தலைநகரான வுஹானும் ஜனவரி 23 முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டு பூட்டப்பட்டுள்ளன. பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பெரும்பாலான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சுகாதார ஆணைய செய்தித் தொடர்பாளர் மி ஃபெங், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகள் செயல்படத் தொடங்கியுள்ளன என்றார்.

ஹூபேயில் அதிகமான மருத்துவ உதவிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தான பாதிப்புகளைத் தவிர்த்துள்ளன. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் ஆபத்து நிலை விகிதம் வீழ்ச்சியடைந்து வருவதாக மி கூறினார்.

ஆரம்பகாலக்கட்ட பாதிப்புகள் இப்போது விரைவாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. அவை மேலும் சிக்கலானதாக மாறுவதத் தடுக்கின்றன, மி கூறினார்.

Reuters