கொரோனா வைரஸ் : சீனாவின் ஹூபேவில் மேலும் 100 இறப்புகள், உலகளாவிய அளவில் மொத்தம் 1,770 இறப்புகள்

கொரோனா வைரஸ் : சீனாவின் ஹூபேவில் மேலும் 100 இறப்புகள், உலகளாவிய அளவில் மொத்தம் 1,770 இறப்புகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமான சீனாவின் ஹூபே மாகாணம் பிப்ரவரி 16 அன்று 1,933 புதிய பாதிப்புகளையும் 100 புதிய இறப்புகளையும் அறிவித்துள்ளது என்று உள்ளூர் சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ஹூபே சுகாதார ஆணையம் நேற்று இறுதிக்குள் மாகாணத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 58,182ஐ எட்டியுள்ளது எனவும், இதில் 1,696 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், நேற்று, மாகாணம் பாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கைகளை அறிவித்தது, அனைத்து தனியார் வாகனங்களுக்கும் சாலைகளைத் தடுக்கும்படி அதன் நகரங்களுக்கு உத்தரவிட்டது.

சீனாவிற்குள், அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை 2,009 புதிய பாதிப்புகளை பதிவுசெய்துள்ளனர். இது முந்தைய நாள் 2,600க்கும் அதிகமாக இருந்தது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அவர்களின் முயற்சிகள் பலனளிப்பதாக இது காட்டுகிறது என்று அவர்கள் கூறினர்.

“கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு முயற்சிகளின் பலன்கள் தோன்ற ஆரம்பிக்கின்றது” என்று சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் புதிய பாதிப்புகள் இப்போது மொத்தம் 70,445. இதில் 1,765 பேர் இறந்துள்ளனர். இதில் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ள 143 இறப்புகள் உட்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே, 600க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் சீன நகரங்களிலிருந்து பயணித்தவர்கள் ஆவர். அதில் மொத்தம் ஐந்து பேர் இறந்துள்ளனர்.

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உள்ள வனவிலங்கு சந்தையில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது. சீனாவின் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான ஹூபேயையும் அதன் தலைநகரான வுஹானையும் கட்டுப்பாட்டில் பூட்டப்பட்டுள்ளன.