வான் அஜிசா: ஒற்றுமையை குலைக்காதீர்கள், இன உணர்வுகளை ஆதரிக்காதீர்கள்

வான் அஜிசா: ஒற்றுமையை குலைக்காதீர்கள், இன உணர்வுகளை ஆதரிக்காதீர்கள்

நாட்டின் துணைப் பிரதம மந்திரி டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் துட்சமாக நினைக்காமல் அதற்கு பதிலாக இந்த பண்புகளை பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுங்கள் என்று மலேசியர்களுக்கு நினைவுபடுத்தினார்.
பல்வேறு இனங்களுக்கிடையிலான நிலவும் நல்லிணக்கம், நாட்டின் மத, இன, மொழி மற்றும் கலாச்சாரத் தன்மையில் பகிரப்பட்ட மதிப்புகளிலிருந்து உருவான ஒற்றுமையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

“நண்பர்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும்போது ஒரு மந்தை மனநிலையைப் பின்பற்றுவது எளிது. அப்படி இருக்கும் போது ஒப்பிடுகையில், பகுத்தறிவு சிந்தனையுடன் செயல்படாமல், உணர்ச்சிகளின் அடிப்படையில் தான் அவர்களின் செயல்கள் பிரதிபலிக்கும்.

“இது ஆபத்தானது. இதனால் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்கள் அனுபவிக்கும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்பட தூண்டப்படுவார்கள்” என்று பண்டான் நாடாளுமன்றத் தொகுதிக்கான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல கொண்டாட்டத்தில் ஒரு உரையில் அவர் கூறினார். இது நேற்று இரவு பாண்டன் இந்டாவில் உள்ள மஜ்லிஸ் பெர்பண்டாரான் அம்பாங் ஜெயாவில் நடைபெற்றது.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வான் அஜிசா, மலேசியர்கள் நாட்டில் இன உணர்வுகளைத் தூண்டும் திட்டங்களைக் கொண்ட நபர்களை அனுமதிக்கக்கூடாது, என்றார்.

அதோடு, கோவிட் -19 பரவுவதைத் தடுக்க தங்கள் கைகளை தவறாமல் சுத்தம் செய்து நல்ல சுகாதாரத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.