கோவிட்-19: சீனாவின் இறப்பு எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது

கோவிட்-19: சீனாவின் இறப்பு எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது

கோலாலம்பூர் (பிப்ரவரி 18): கோவிட்-19 பாதிப்பில் சீனாவின் இறப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பதிவாகியுள்ள 98 இறப்புகளில் – ஹூபேயில் 93, ஹெனானில் மூன்று, ஹெபீ மற்றும் ஹுனானில் தலா ஒன்று என்று மலேசியாவில் உள்ள சீனத் தூதரகம் தன் முகநூலில் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 17, 24:00 மணி நிலவரப்படி, 58,016 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. (அவற்றில் 11,741 கடுமையான தொற்றுகள்). இதுவரை 12,552 பேர் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்; 1,868 இறப்புகள் பதிவாகியுள்ளன, மற்றும் 6,242 தொற்று என சந்தேகிக்கப்படும் நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்” என்று அந்த முகநூல் பதிவு கூறுகிறது.

இதற்கிடையில், 560,901 நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளனர். 141,552 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர், என்றும் கூறுகிறது.