பிரபல நடிகர் அஷ்ராப் சின்க்ளேர் 40 வயதில் இறந்தார்

பிரபல நடிகர் அஷ்ராப் சின்க்ளேர் 40 வயதில் இறந்தார்

நாட்டின் பிரபல நடிகரும் இளையோர்கள் விரும்பும் ஒருவருமான 40 வயது நடிகர் அஷ்ரப் சின்க்ளேர் (Ashraf Sinclair) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் காலமானார்.

இந்த சோகமான செய்தியை அஷ்ரப் திருமணம் செய்துகொண்ட இந்தோனேசிய பாடகரான பூங்கா சிட்ரா லெஸ்டாரியின் மேலாளராக இருக்கும் டோடி உறுதிப்படுத்தியுள்ளார். அஷ்ரப் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவர் கூறினார்.

1979 செப்டம்பரில் இங்கிலாந்தில் பிறந்த அஷ்ராப், பிரபல ஆயிஷா சின்க்ளேரின் மூத்த சகோதரர். இவருடைய தம்பி ஆடம், பாப் பாடகி யூனாவை மணந்துள்ளார்..

மறைந்த அஷ்ராப் என்.டி.வி 7 இன் பாக்ஸ் ஆபிஸ், ஆஸ்ட்ரோ ரியாவின் பீட் டிவி தொகுப்பாளராகவும் இருந்தார். மேலும் கோல் & ஜிஞ்சு திரைப்படத்திலும், கோல் & ஜிஞ்சு தொடரிலும் நடித்தவர் ஆவார்.