நிபுணர்: கோவிட்-19 – இப்போது திட்டமிடத் தொடங்குங்கள்

நிபுணர்: சிங்கப்பூருக்கு கவனம் செலுத்துங்கள், புதிய கோவிட் -19 மையம்

சீனாவின் வுஹானில் கோவிட்-19 நோய்த்தொற்றின் வீதம் குறைந்து வருகின்ற போதிலும், ஒரு புதிய பாதிப்பு மையத்தின் சாத்தியம் குறித்து ஒரு தொற்று நோய் நிபுணர் கவலை தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிறிஸ்டோபர் லீ கூறுகையில், அண்டை நாடான சிங்கப்பூரின் பாதிப்புகள் குறித்து அவர் சிறப்பு கவனம் செலுத்துவதாகச் சொன்னார்.

மலேசியாகினி மற்றும் கினிடிவிக்கு நேற்று அளித்த பேட்டியில், சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவின் முன்னாள் தலைவர் சிங்கப்பூரில் பாதிப்பைப் பற்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கோவிட்-19 வைரஸ் 77 பாதிப்புகளில், மொத்தம் 53 பேர் நெருங்கிய தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, சிங்கப்பூரர்கள் சம்பந்தப்பட்ட 50 பாதிப்புகளும், நிரந்தர குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மூன்று பாதிப்புகளும் உள்ளன; 24 பாதிப்புகள் குணப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பாதிக்கப்பட்ட ஐந்து சிங்கப்பூரர்கள் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவுக்கு பயணம் செய்த வரலாறு ஏதுமே இல்லை.

வழக்குகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணத்தைக் கண்டறியும் முயற்சிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் அதிகரிப்பார்கள் என்று லீ நம்புகிறார்.

இந்த நிலைமை “உள்ளூர் மக்களுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு” வழிவகுக்கும் என்றும் “தொடர்பில்லாத பாதிப்புகளுக்கும்” வழிவகுக்கும் என்றும் அவர் அஞ்சுகிறார்.

“அவர்கள் நிலமையை இன்னும் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளனர் (மற்றும்) அவர்களால் இன்னும் அனைவரையும் விசாரிக்க முடிகிறது. ஆனால் அதிகமான பாதிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.. வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. பின், சிங்கப்பூரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளால் இதை எட்டிப் பிடிக்க முடியாமல் போகலாம். அது நடந்தால், மேலும் அது சிக்கலானதாக மாறும். அது ‘உள்ளூர் மக்களுக்கு நோய்த்தொற்று பரவி’, பின் அதற்கான காரணத்தை ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாமல் போகும்,” என்று அவர் கூறினார்.

அப்படி நடந்தால், நோய் நாட்டில் பரவுவதைத் தடுக்க மலேசியாவால் அதிகம் செய்ய முடியாது என்று லீ கூறினார்.

வேலை அல்லது படிப்பு நோக்கங்களுக்காக ஒவ்வொரு நாளும் 300,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூரைக் கடக்கிறார்கள் என்பது இன்னும் நிலையை மோசமாக்கும்.

“ஆதலால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பது முக்கியம். அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செய்தால் அதனால் நாமும் பயனடைவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய பாதிப்புகள் இருக்கும் என்று நம்புகிறார்கள். கோவிட்-19 பாதிப்பில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்த தீவு உள்ளது.

‘கதவை மூடுவது’ பயணாளிக்காது

சிங்கப்பூருக்கான பயணங்களைக் தடுப்பதனால் மட்டும் “தொடர்பில்லாத பாதிப்புகளை” தடுக்க முடியாது என்றும் கூறினார்.

இதுபோன்ற பாதிப்பை கண்டறியப்படும்போது, ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே ஜோகூரைக் கடந்திருப்பார்கள் என்று அவர் கூறினார். அதற்குள் அரிசி கஞ்சியாகிவிடும்,” என்று அவர் கூறினார். பயணக் கட்டுப்பாடுகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனையைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

கோவிட்-19க்கான தனிமைப்படுத்தப்படும் காலம் இரண்டு முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடுமையான உடல் வெப்பநிலை சோதனைகள் நோய்த்தொற்றின் வீதத்தைக் குறைக்க உதவும். ஆனால் இந்த முறை “சேதக் கட்டுப்பாடாக” மட்டுமே இருக்கும் என்று லீ வாதிடுகிறார்.

“எல்லாவற்றையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் சிலவற்றை கண்டுபிடிக்க சாத்தியமாகலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

இப்போது திட்டமிடத் தொடங்குங்கள்

சிங்கப்பூரின் இப்படிப்பட்ட சூழ்நிலை வரும் என்று தோன்றுகையின், மலேசியா இப்போதே தணிப்புத் திட்டங்களைத் திட்டமிடத் தொடங்குமாறு லீ பரிந்துரைத்தார்.

இது கோவிட்-19 பாதிப்புகளைத் தடுக்க உதவும் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு உதவிகளை வழங்குவதன் மூலம் அமையலாம்.

“எனது ஆலோசனை என்னவென்றால், பாதிப்பு தீவிரமடையும் முன்பாகவே நாம் திட்டமிட வேண்டும்.

“இவற்றைச் செய்வது எளிதானது அல்ல என்பதால், பல்வேறு நிறுவனங்களுக்கும் பொதுத்துறைக்கும் இடையில் நிறைய திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படும்” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 18 நிலவரப்படி, மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பில் 22 பதிவாகியுள்ளன, ஆறு மலேசியர்கள், 15 சீனர்கள் மற்றும் ஒரு அமெரிக்கர்.

மூன்று மலேசியர்களும், சீனாவைச் சேர்ந்த ஐந்து பேரும் நெருங்கிய தொடர்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள். அனைத்து பாதிப்புகளும் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு இதில் ஒன்பது குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.