வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கூட்டத்திற்கு முன்பு 6 தலைவர்கள் சந்திக்கின்றனர்

இந்த வெள்ளிக்கிழமை PH கூட்டத்திற்கு முன்பு 6 தலைவர்கள் சந்திக்கின்றனர்

இந்த வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கூட்டணியின் கூட்டத்திற்கு முன் பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட தலைவர்கள் 6 பேர் கலந்து பேசுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த ஆறு முக்கிய பாக்கத்தான் தலைவர்கள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட், பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம், பெர்சத்து தலைவர் முகிடின் யாசின், அமானா தலைவர் முகமட் சாபு, டி.ஏ.பி. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் பாக்கத்தான் தலைவர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் ஆகிய 6 தலைவர்கள் ஆகும்.

இந்த கூட்டம், பிரதமர் மாற்றம் மற்றும் பிற தொடர்புடைய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஆறு தலைவர்களைத் தவிர, மேலும் 19 பாக்காத்தான் தலைவர்கள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்மின் அலி, தியான் சுவா, டாக்டர் சேவியர் ஜெயகுமார், சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில், சைபுதீன் அப்துல்லா சுரைடா கமருதீன், தான் கோக் வாய், கோபிந்த் சிங், எம். குலசேகரன், அந்தோனி லோக், லிம் கிட் சியாங், முக்ரிஸ் மகாதிர், மர்சுகி யஹ்யா, ரினா ஹருன், சையட் சிடிக் சையட் அப்துல் ரஹ்மான், சலாவுதீன் அயூப், ஹட்டா ராம்லி, ஹுசம் மூசா, மற்றும் காலித் சமத் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என நம்பப்படுகிறது.

டாக்டர் மகாதீர் லாவோஸுக்கு பயணத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து ஊகங்கள் எழுந்துள்ளன. இதனால் முக்கியமான ஒன்று நடக்கப்போகிறது என்ற ஊகத்தைத் தூண்டியுள்ளது.

நேற்று, மகாதீர், இந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தாலும், நவம்பரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு (அபெக்) பின்னர் அவர் ராஜினாமா செய்வார் என்று கூறினார்.

சில பார்வையாளர்கள் அன்வாருக்கு சபையில் போதுமான பிரதிநிதிகளின் ஆதரவு இல்லை என்பதையும், 1998 வரலாறு மீண்டும் நிகழக்கூடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.