இலக்கிய சமூகம் மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது

இலக்கிய சமூகம் மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது

78 வயது மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் நேற்று மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார். நாட்டின் மக்கள் குறிப்பாக இலக்கிய சமூகம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

1942-இல் கெடாவின் பெடோங்கில் (Bedong) சுப்பிரமணியம் கிருஷ்ணனாகப் பிறந்த இவர் பித்த நாளத்தின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அவரது நாவல்களில் தி ரிட்டர்ன் The Return (1981), இன் எ ஃபார் கன்ட்ரி In A Far Country (1993) மற்றும் பிட்வீன் லைவ்ஸ் Between Lives (2003) ஆகியவை அடங்கும். கே.எஸ்.மணியம் கவிதை, நாடகங்கள் மற்றும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

“ஒரு இலக்கிய இமயம் எங்களை விட்டு பிரிந்துள்ளார். ரெஸ்ட் இன் பவர், கே.எஸ். மணியம் Rest in Power, KS Maniam” என்று எழுத்தாளர் பெர்னிஸ் சவுலி (Bernice Chauly) கூறினார்.

1980 முதல் 1997 வரை மலாயா பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த மணியம் மலேசிய எழுத்தாளர்களில் மிகவும் பாராட்டப்பட்டவர். இவர், லாயிட் பெர்னாண்டோ (Lloyd Fernando), டான் டுவான் எங் (Tan Twan Eng) மற்றும் தாஷ் ஆவ் (Tash Aw) ஆகியோருடன் ஆங்கிலத்தில் எழுதிய மலேசிய எழுத்தாளர்களில் வரிசையில் இணைந்து போற்றப்படுகிறார்.

இவருக்கு மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

“இறுதி மரியாதை செலுத்த விரும்புவோர் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 9, Jalan SS19/1G, Subang Jaya, Selangor-ல் உள்ள அவரது வீட்டில் செய்யலாம்.

“வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பெட்டாலிங் ஜெயா, எம்.பி.பி.ஜே கம்புங் துங்குவில் அவரது உடல் தகனம் செய்யப்படும்” என்று கல்வியாளர் மலாச்சி எட்வின் வேதமணி அறிவித்தார்.

“அவர் எழுதுவதை நேசித்ததால் அவர் எழுதினார், அவர் அற்புதமான எழுத்தாளர் என்பதை அவரது பணி சாட்சியமளிக்கும்.” என்று மலாச்சி மேலும் கூறினார்.