“நவம்பருக்கு முன்பு ஏதோ ஒன்று நடக்கலாம்” – ரைஸ் யாத்திம்

“நவம்பருக்கு முன்பு ஏதோ ஒன்று நடக்கலாம்” – ரைஸ் யாத்திம்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான அதிகார மாற்றத்தை நாளை நடைபெறும் பாக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் விவாதிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பெர்சத்து உச்ச சபை உறுப்பினர் ரைஸ் யாத்திம் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காது என்று சூசகமாகக் கூறியுள்ளார்.

பிரச்சினைக்கு மேலும் சூழ்ச்சியைச் சேர்ப்பது போல, அவர்: “நவம்பருக்கு முன்பு ஏதோ நடக்கலாம்.” என்று கூறினார்.

நவம்பரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டிற்குப் பிறகு பதவி விலகுவதாக மகாதீர் பலமுறை கூறியுள்ளார்.

94 வயதான பிரதமர் ஓய்வு பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க சிலர் எவ்வாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதை ரைஸ் குறிப்பிட்டார்.

“துன் மகாதீர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் தேதியைக் கொடுப்பது செய்தி அனைவரையும் வேதனைப்படுத்துகிறது” என்று அவர் இன்று பிற்பகல் ட்வீட் செய்துள்ளார்.

“நவம்பர் 2020 என்று அவர் சொல்லியுள்ளது மற்ற PH (ஹராப்பான்) தலைவர்களுக்கு போதுமானதாக இல்லை”.

“நவம்பருக்கு முன்பு ஏதோ நடக்கக்கூடும். அப்போது அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. வேறு சக்திகளும் காரணிகளும் உள்ளன,” என்று அவர் கூறினார்.

மலேசியாகினி தனது கருத்துக்கள் குறித்து மேலும் தெளிவுபெறும் முயற்சியில் ரைஸை தொடர்பு கொண்டுள்ளார்.

அண்மையில், மகாதீர் அன்வருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதாகக் கூறினார், ஆனால் யார் தேசத்தை வழிநடத்த வேண்டும் என்ற இறுதி வார்த்தை சட்டமன்ற உறுப்பினர்கள் கையிலே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

சில பார்வையாளர்கள் இதை அன்வார் சட்ட சபை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகக் கண்டனர்.

மகாதீர் பதவிக் காலம் முடிவடையும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று பாஸ் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைக்க திட்டமிட்டுள்ளது.

பி.கே.ஆரில் அன்வாரின் போட்டியாளர்கள் உட்பட அரசியலில் இரு தரப்பிலிருந்தும் எம்.பி.க்கள் மகாதீருக்கு ஆதரவாக ஒரு சட்டப்பூர்வ பத்திரத்தில் (statutory declaration) கையெழுத்திடுகிறார்கள் என்றும் கூற்றுக்கள் உள்ளன.

மகாதீரை ஆட்சியில் வைத்திருப்பது குறித்து சதி நடப்பதாக அன்வாரே உறுதிப்படுத்தினார், ஆனால் மகாதீர் இதில் ஈடுபடவில்லை என்றும் கூறினார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், மகாதீர், பிரதமராக இருந்த காலத்தில், பாலியல் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அன்வாரை தனது துணை பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.

குற்றச்சாட்டுகள் புனையப்பட்டதாகக் கூறிய அன்வார், எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் இறங்கி, Reformasi என்ற சீர்திருத்த இயக்கத்திலும் இறங்கினார். இது பி.கே.ஆர். மற்றும் இப்போது ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது.

கடந்த வாரம் ஒரு மன்றத்தில் பேசிய பி.கே.ஆரின் வில்லியம் லியோங் அன்வாருக்கு மீண்டும் பிரதமர் பதவியை மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.

அன்வர் அடுத்த பிரதமராக இருப்பதை உறுதி செய்வதற்காக “பிளான் பி” ஐ செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அந்த சேலாயாங் எம்.பி. கூறினார்.

“மக்களின் குரல் முக்கியமானது. சரியான பாதையில் திரும்புவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க மக்களின் கருத்துக்கள் அவசியம், என்றார்.

“நாம் இதற்கு முன்பு வீதிகளில் இறங்கியுள்ளோம், ஆனால் நான் அவர்களை அப்படி செல்லச் சொல்லவில்லை, ஆனால் அந்த வகையான உறுதியை நாங்கள் எதிர்ப்பார்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.