957 பயணிகள், 1,701 பணியாளர்களுடன் MV Genting Dream சொகுசு கப்பல் இன்று போர்ட் கிள்ளானை அடைகிறது
சிங்கப்பூரிலிருந்து போர்ட் கிள்ளானில் கப்பல்துறைமுகத்தில் இன்று வந்தடையும் எம்.வி.கெந்திங் ட்ரீமின் (MV Genting Dream) அனைத்து பயணிகளும் பணியாளர்கள் இன்று மீண்டும் மீண்டும் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்கள் கோவிட்-19 அறிகுறிகளைக் காட்டவில்லை.
போர்ட் கிள்ளான் ஆணையத்தின் (பி.கே.ஏ) தலைவர் ஈன் யோங் ஹியான் வா எந்த ஒரு பயணியோ, பணியாளர்களோ அல்லது பயணக் கப்பலோ சமீபத்தில் சீனாவுக்கு செல்லவில்லை என்றார்.
அப்படியிருந்தும், கப்பல் வந்தடைந்ததும் 957 பயணிகள் மற்றும் 1,701 பணியாளர்கள் என்று முறையே – இறங்கும்போது கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.
” MV Genting Dream சீனாவுக்கு செல்லவில்லை, இது சிங்கப்பூர்-மலாக்கா ஸ்ட்ரெய்ட்ஸ், பினாங்கு மற்றும் ஃபூகெட் வழித்தடங்களை பயன்படுத்திய ஒரு கப்பல் ஆகும்.
“அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களும் சிங்கப்பூரிலிருந்து ஏறுவதற்கும் புறப்படுவதற்கும் முன்னர் சிங்கப்பூர் அதிகாரிகளால் தவறாமல் சோதனையிடப்பட்டனர். மேலும் பயணத்தின் போது கப்பலின் மருத்துவ பணியாளர்கள் கப்பலில் பயணம் செய்தார்கள்.
“போர்ட் கிள்ளானில் அவர்கள் நுழைந்தவுடன், குறிப்பிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும், சுகாதார அதிகாரிகள் அனவரையும் சோதனையிடுவார்கள்” என்று ஈன் யோங் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
யாருக்காவது காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் மேல் சோதனைகளுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்த சொகுசு பயணக் கப்பலில் – 15 நாடுகளின் பயணிகளைக் கொண்டுள்ளது, அதில் பெரும்பாலும் இந்தியர்கள். புருனை, கனடா, செக் குடியரசு, கிரேட் பிரிட்டன், இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மியான்மர், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்களும் உள்ளனர்.
இதற்கிடையில், கப்பல் பணியாளர்கள் சீனா உட்பட 32 நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
“இதில் நான்கு முதல் ஐந்து பேருந்து பயணிகள் கோலாலம்பூருக்குள் ஒரு நாள் சுற்றுப்பயணத்திற்கு செல்வார்கள், மீதமுள்ளவர்கள் லைட் அண்ட் ஈசி அட்டவணையில் இருப்பார்கள்” என்று ஈன் யோங் மேலும் கூறினார்.
இந்த கப்பல் நண்பகலுக்கு இங்கு வந்து, பின் இரவு 11 மணிக்கு போர்ட் கிள்ளானிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் திரும்பும்.
இந்த கப்பல் போர்ட் டிக்சனில் துறைமுகமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் சீனாவிலும் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சத்தை தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகள் கப்பலின் தடத்தை திருப்பி அனுப்பி விட்டனர்.
சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு குறித்த எச்சரிக்கை அளவை ஆரஞ்சு நிறமாக உயர்த்தினர் – இது இரண்டாவது மிக உயர்ந்த நிலை. அத்தீவு மாநிலத்தில் 84 வழக்குகள் பதிவாகியுள்ளன.