அன்வார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார்
நாளை நடக்கும் கூட்டத்தில் தனது அதிகாரம் மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் சுருக்கமாக இருக்கும் என்று நம்புகிறார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம்.
மாற்றம் தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்தப்படுமா என்று கேட்டா போது, “மாற்றம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், அதை அரை மணி நேரத்தில் பேசி தீர்க்க முடியும். பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும்” என்று அன்வார் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பக்காத்தான் ஹராப்பான் கவுன்சில் மாநாடு இந்த மாற்றம் திட்டம் குறித்து நாளை விவாதிக்கவுள்ளது. நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டிற்குப் பிறகு இது நடக்கும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, அன்வார்: “இல்லை, நாங்கள் கலந்து விவாதிப்போம்.” என்று பதிலளித்தார்.
இருவருக்கும் அழுத்தம் கொடுக்கப்படக்கூடாது என்று அவர் கூறினார்.
“நாங்கள் இருவரும் மற்றும் ஹராப்பான் கவுன்சிலும் இந்த மாற்றம் சுமூகமாகவும், அமைதியாகவும், ஒழுங்காகவும் இருக்கும் என்று முடிவு செய்துள்ளோம், நாங்கள் அதன் பின்னும் ஒரே அணியாக தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று அவர் கூறினார்.