இரண்டு வெவ்வேறு SD-க்கள் கையொப்பம் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றன

இரண்டு வெவ்வேறு SD-க்கள் கையொப்பம் இடப்படுகின்றன

பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர்களிடையே இப்போது, பதவியேற்பு அங்கீகாரம் பெற இரண்டு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒன்று, பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமராக ஆதரிப்பதற்காக; இரண்டாவதாக, அதிகார மாற்றம் குறித்து PH செய்த உறுதியை நிலைநாட்டுவதற்காக..

மலேசியாகினி பெரும்பான்மையான பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களை நேர்காணல் செய்த பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தில் பி.கே.ஆரின் ஜோஹரி அப்துல், அவர் சட்டரீதியான தீர்மானம் (Statutory Declaration (SD)) முயற்சியைத் தொடங்கினார். அதில்: “(நான்) மகாதீர் முகமதுவை ஏழாவது பிரதமராக ஆதரிக்கிறேன், அன்வார் இப்ராஹிமை எட்டாவது பிரதமராக ஆதரிக்கிறேன்.” என்று தொடங்கியுள்ளது.

இந்த உறுதிமொழி ஒப்பந்தத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது – ஜனவரி 7, 2018 அன்று PH இன் உயர் தலைவர்களிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் – ஆனால் அதில் மாற்றத்திற்கான தெளிவான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

பி.கே.ஆர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் தயார் செய்த அந்த எஸ்டி, அடுத்த பொதுத் தேர்தல் வரை மகாதீரை பதவியில் இருக்க ஆதரித்து மற்றொரு எஸ்டிக்கு கையொப்பங்களைப் பெறுவதற்கான மற்றொரு கட்சியின் பிரச்சாரத்திற்கு பதிலளிப்பதாக இருக்கும் என்று ஜோஹரி கூறினார்.

“50 எம்.பி.க்களில் சுமார் 40 பேர் கையெழுத்திட்டுள்ளனர். எங்களிடம் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நாட்டை காப்பாற்ற, கட்சியை காப்பாற்ற

மகாதீருக்குப் பிறகு அன்வார் பிரதமராக வேண்டும் என்று என்பதால் தான் இந்த முயற்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக அந்த சுங்கை பெட்டானி எம்.பி. தெரிவித்தார்.

கையொப்பங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) நவம்பர் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து மகாதீர் தனது ராஜினாமாவை உறுதிப்படுத்திவிட்டபோதும் ஏன் இந்த எஸ்டி தேவைப்படுகிறது குறித்து கேட்டதற்கு, ஜோஹரி: “அது துன் (மகாதீரின்) ஒப்பந்தம், (ஆனால்) இது நம்மிடையே (பி.கே.ஆர்) உள்ள ஒப்பந்தம்,” என்றார்.

மகாதீருக்கு தனது சொந்த கட்சி உள்ளது, எனக்கும் அப்படித்தான் என்று ஜோஹரி கூறினார்.

“நான் எனது தலைவருக்கு என் விசுவாசத்தைக் காட்ட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஜோஹாரியின் கூற்றுப்படி, பி.கே.ஆர். whip தலைவராக இருப்பதன் மூலம் இந்த கையொப்பம் சேகரிக்கப்பட்டது என்றும், மேலும் அவர் துணை தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவளிப்பவர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கட்சி எம்.பி.க்களுடன் தொடர்பு கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோல லங்காட் எம்.பி. அப்துல்லா சானி அப்துல் ஹமீத், மற்றும் ஜுகா முயாங் (லுபுக் அன்து) ஆகியோர் ஜோஹாரியின் SD-யில் கையொப்பமிட்டு விட்டதாக கூறினர்.

“நான் இந்த நாட்டையும் கட்சியையும் காப்பாற்ற விரும்புகிறேன். எல்லாமே ஒழுங்காக ஒழுங்கமைக்கப்பட்டு, GE14இன் கொள்கையறிக்கை உறுதிப்பாடுகளை செயல்படுத்தப்படுவதை விரும்புகிறேன்” என்று அப்துல்லா சானி கூறினார்.

இதற்கிடையில், அஸ்மினின் அரசியல் செயலாளர் முஹம்மது ஹில்மான் இட்ஹாம் தனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியதாக பாடாங் செராய் எம்.பி எம். கருப்பையா மலேசியாகினியிடம் தெரிவித்தார், ஆனால் அதில் எஸ்டி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார்.

கருபையாவைப் பொறுத்தவரை, அவர் அனைத்து தலைவர்களையும் மதிப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் மகாதீருக்கு அடுத்து எட்டாவது பிரதமராக அன்வாரை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

“நான் விற்பனைக்கு இல்லை,” என்று அவர் கூறினார். அன்வாரை ஆதரிப்பதற்காக எஸ்டி பற்றி தனக்குத் தெரியும் என்றும் ஆனால் இதுவரை அதைப் பார்க்கவில்லை என்றும் கருபையா கூறினார்.