கோவிட் -19: ஜொகூர் காஸ்வேயில் ஒத்துழைப்பு தீவிரம்

கோவிட் -19: ஜொகூர் காஸ்வேயில் ஒத்துழைப்பு தீவிரம்

கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைக் குறைக்கும் முயற்சியில் மலேசியா மற்றும் சிங்கப்பூர், ஜொகூர் காஸ்வேயில் (கடல் பாலம்) ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும்.

வெளியுறவு மந்திரி சைஃபுடீன் அப்துல்லா தனது சிங்கப்பூர் பிரதிநிதி டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் ஜொகூர் காஸ்வே தொடர்பாக சந்திப்பு ஒன்றை நடத்தியதாகக் கூறினார். ஜொகூர் காஸ்வேயில் தினசரி 250,000 வாகனங்களை பதிவு செய்கிறது.

“கோவிட்-19 பரவுதலை தடுக்கும் நோக்கில் இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் கையாள்வதில் தங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்”.

“அதை சரியாக செய்யவில்லை என்றால் (ஒத்துழைப்பு), அது (கோவிட்-19 தொற்று) பரவும். எனவே, இரு நாடுகளும் ஒன்றாக காஸ்வேயை கண்காணிக்க வேண்டும்,” என்று லாவோஸில் இன்று நடந்த கோவிட்-19 பாதிப்பை கையாள்வதில் ஆசியான் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த சந்திப்புக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யி மற்றும் பிலிப்பின்ஸ் வெளியுறவு செயலாளர் தியோடோரோ எல். லோக்சின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சீனா இந்த தொற்றுநோய் பரவலை வெற்றிகரமாக சமாளிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிய உறுப்பு நாடுகளும் வெளிப்படுத்தியதாக சைபுதீன் கூறினார்.

“இன்றைய கூட்டத்தில், பிரச்சனையைத் தீர்க்க சீனாவுக்கு உதவ ஆசியான் முன்வந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

அடுத்த சில மாதங்களில் இந்த பாதிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து பொருளாதார தாக்கத்தை குறைக்க ஒரு மூலோபாயத்தை வகுக்க அனைத்து ஆசிய உறுப்பு நாடுகளும் சீனாவும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

“வைரஸ் பல மாதங்களுக்கு தொடரும் என்பதை நாங்கள் உணர்கிறோம். எனவே, (ஆசிய) பொருளாதார பிரச்சினைகளின் (சவால்களை) குறிப்பாக சுற்றுலாத் துறையில் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்,” என்றார்.

“நாம் ஒரு பரஸ்பர புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவதில். ஒரு நாடு மட்டும் உறுதியாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, மற்ற நாடுகளும் அப்படி இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட்-19 பாதிப்பை கையாள்வதில் சீனாவுடன் இணைந்து செயல்படும் ஆசிய தலைவர்கள் மற்றும் மக்கள் ஒற்றுமையை வாங் யி பாராட்டினார்.

“இந்த நட்பை சீனா மதிக்கிறது,” என்று அவர் கூறினார்.