இறக்குமதி செய்யப்பட்ட விலங்கு பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன
Jabatan Perkhidmatan Veterinar (DVS)/கால்நடை சேவைகள் திணைக்களம், இறக்குமதி செய்யப்பட்ட விலங்கு பொருட்கள் மற்றும் உள்நாட்டு கால்நடைகள் மீது கோவிட்-19 சோதனைகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கால்நடை சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குவாஸா நிஜாமுதீன் ஹாசன் நிஜாம் தெரிவித்தார்.
கோழி இறைச்சி போன்ற இறக்குமதி செய்யப்படும் விலங்கு பொருட்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு ஆய்வக சோதனைகளுக்கான மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதாக அவர் கூறினார்.
“இது போன்ற தயாரிப்புகளை கண்காணிப்போம் … இதுவரை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் மாதிரி ஏதும் இல்லை.
கால்நடை அலுவகங்கள் எல்லா பகுதியிலும் உள்ளன. எனவே உடல்நலம், நோய் போன்ற பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், அது ஒரு தனியார் அல்லது அரசாங்க கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும். தொடர்புடைய COVID-19 பிரச்சினை ஏதும் உள்ளதா என்று அன்கே பார்ப்போம்,” என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
சீனாவில் இருந்து மலேசியாவிற்கு இதுவரை உயிருடன் விலங்குகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை, எனவே நாட்டில் விலங்குகள் மூலம் COVID-19 பரவும் ஆபத்து குறைவாக உள்ளது என்றார்.
டாக்டர் குவாசா நிஜாமுதீன், கால்நடைகள் சம்பந்தப்பட்ட COVID-19 பரவுவதற்கான தெளிவான சான்றுகள் இன்னும் இல்லை என்றார்.
இன்று காலை சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவின் COVID-19 பாதிப்புகளில் 15 சீன நாட்டினர், ஆறு உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு அமெரிக்க குடியினர் சம்பந்தப்பட்ட 22 பாதிப்புகள் உள்ளது. அவர்களில் பதினேழு பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஐந்து பேருடன் மருத்துவமனையில் உள்ளனர்.