கோலா லங்காட் வனப்பகுதி “சீரழிந்த காடுகள்” – சிலாங்கூர் மந்திரி புசார்

Kuala Langat (North) Forest Reserve கோலங்கா லங்காட் (வடக்கு) வனப்பகுதியை வர்த்தமானியை அகற்றுவதற்கான (de-gazette) அரசின் முன்மொழிவை சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷரி தற்காத்துள்ளார். 40 சதவீத காடுகள் ஏற்கனவே “சீரழிந்துவிட்டன” என்பதால் இதை மேம்பாட்டிற்கு விட்டுவிடுவதுதான் நல்லது என்று அவர் கூறினார்.

நேற்று ஒரு ஊடக மாநாட்டில், கலப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக 958 ஹெக்டேர் வனப்பகுதியில் 930.93 ஹெக்டேர் பகுதியை (97.1 சதவீதம்) வர்த்தமானியை அகற்ற செய்வதற்கான (de-gazette) திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் காரணங்களை அவர் விளக்கினார்.

கோலா லங்காட் வனப்பகுதியில் உள்ள மரங்களின் தரம் – ஒரு கரி காடு என்று அமிருதின் கூறினார். இது தீ காரணமாக அரிக்கப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ச்சியான தீ ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

“நாற்பது சதவிகிதம் தீ மற்றும் சேதம் காரணமாக “சீரழிந்த காடுகள்” ஆகிவிட்டது,

“எனவே இந்த பகுதியை அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமுடையதாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

“அதன் முன் பகுதியில், சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்)/ Selangor State Development Corporation (PKNS) சிலாங்கூர் வணிக மைய மேம்பாட்டைக் கொண்டிருக்கும். அதற்கு அருகில் காமுடாவுக்கு சொந்தமான காமுடா கோவ் (Gamuda Cove) மேம்பாட்டு திட்டமாகும்.

“இது (முன்மொழிவு) காட்டுத் தீயைத் தடுப்பதற்கும் ஒரு வழி ஆகும் என்று அவர் கூறினார்.

ரயில் பாதை பாதுகாக்கப்பட்ட பகுதி வழியாக ஓடுவதால் வன இருப்புக்களின் வர்த்தமானியை அகற்றுவது ECRL திட்டத்திற்கு பயனளிக்கும் என்று அமிருதீன் மேலும் கூறினார்.

ECRL-க்கு வழிவகுக்கும் வகையில் இந்த வர்த்தமானியை அகற்று செய்யப்படுவதாக நான் கருதுகிறேன், இது புதிய பொருளாதாரங்களைத் தூண்டும்; கிழக்கு கடற்கரையில் (தீபகற்ப மலேசியாவின்) மற்றும் சிலாங்கூரில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும் என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த வர்த்தமானி அகற்றும் திட்டம் இறுதி செய்யப்படவில்லை என்றும், இது ஒரு திட்டமாகவே உள்ளது என்றும் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

வனப்பகுதியை வர்த்தமானி அகற்ற செய்வதற்கு முன்னர் அரசாங்கம் தற்போது மூன்றாம் கட்டத்தில் உள்ளது – அதாவது தங்களது பிப்ரவரி 5 பொது அறிவிப்புக்கான கருத்துக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சிலாங்கூர் வனத்துறைக்கு சமர்ப்பிக்க மார்ச் 5 வரை அவகாசம் உள்ளது.

இதுபோன்ற நில விவகாரங்களுக்கான கருத்துகணிப்பை சிலாங்கூர் அரசாங்கம் மட்டுமே பொதுமக்களின் கருத்தை நாடியுள்ளது என்பதை வலியுறுத்தினார் அமிருதீன். அதோடு, இதற்கு பதிலாக, புதிய பகுதிகளை வன இருப்பு என வர்த்தமானி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.

ஒராங் அஸ்லி பாதிக்கப்படவில்லை

ஒராங் அஸ்லியின் கவலைக்கு மாறாக, முன்மொழியப்பட்ட வர்த்தமானி அகற்றப்படும் எந்தவொரு பூர்வீக கிராமங்களும் பாதிக்கப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் இந்த முன்மொழிவு, ஒராங் அஸ்லியின் குடியேற்றங்களை, கிராமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டது என்றும் அவர்களிடமிருந்து விலகி தூரத்தில் இருக்கும் பகுதிகளை மட்டும் வர்த்தமானி அகற்ற விண்ணப்பித்துள்ளது என்றும் அமிருதீன் விளக்கினார்.

“அவர்களின் கிராமம், கம்பம், அவர்களின் காடு மற்றும் அவர்கள் சுற்றித்திரியும் பகுதிகள் தொந்தரவு செய்யப்படாது,” என்று அவர் கூறினார்.

இந்த காரணத்திற்காக கிட்டத்தட்ட 404.69 ஹெக்டேர் வனப்பகுதி தீண்டப்படாமல் இருக்கும் என்று அமிருதின் கூறினார்.

“தெமுவான் ஒராங் அஸ்லி புதைகுழி சம்பந்தப்பட்ட சிக்கல் இருக்கலாம். பொதுக் கருத்துச் செயல்பாட்டின் போது இதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.

“கல்லறைகள், புதைகுழிகள் இருக்கும் பகுதிகளை வர்த்தமானி அகற்ற செய்ய முயற்சிக்க மாட்டோம், ஆனால் இது முறையீட்டு செயல்முறைக்குப் பிறகு, சரியான நேரத்தில் மட்டுமே செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.


‘அரசியல்’ குற்றச்சாட்டுகள்

செய்தியாளர் சந்திப்பின் போது, வர்த்தமானி அகற்றும் திட்டம் செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டதிலிருந்து, குறைந்தது ஏழு தடவைகள் எதிரான விமர்சனங்களை சந்தித்ததாக அமிருதீன் புலம்பினார்.

“குற்றச்சாட்டுகள் பாதி தவறானவை, சில பொய்யானவை சில (உண்மைகளிலிருந்து) விலகிச் சென்றுள்ளன என்று நான் நினைக்கிறேன்”, என்றார்.

நாங்கள் ஆரம்பத்தில் பொது மக்கள் கருத்து செயல்முறை முடிந்த பின்னரே பதிலளிக்க விரும்பினோம். ஆனால் சமீபத்திய விமர்சனங்களைப் பார்க்கும்போது, இதை விரிவாக விளக்குவது நல்லது என்று நான் நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தை எதிர்க்கும் நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சராக இருக்கும் கோலா லங்காட் எம்.பி. சேவியர் ஜெயக்குமார் குறித்தும் அமிருதின் குறிப்பிட்டார்.