சுவரொட்டி போலியானது: இன்று இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு போலியானது

சுவரொட்டி போலியானது: இன்று இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு போலியானது

இன்று மாலை புத்ராஜெயாவில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் இருந்து பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அதிகாரத்தை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக பி.கே.ஆர். ஆதரவுடைய தன்னார்வ தொண்டு நிறுவனம் மறுத்துள்ளது.

ஜிங்கா 13 மலேசியா/Jingga 13 Malaysia-வின் செயலாளர் அப்சைனிசாம் ரஹ்மான், அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ள அந்த சுவரொட்டி, (demanding transition of power to the eighth PM) அதாவது, எட்டாவது பிரதமருக்கு அதிகாரத்தை மாற்றக் கோரி, என்று அச்சிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அது போலியானது என்று அப்சைனிசாம் ரஹ்மான் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டம் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில்/Perdana Leadership Foundation-ல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு பாக்காத்தான் ஹராப்பான் கவின்சில் சபைக் கூட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு முன்பு, ஆறு ஹராப்பான் உயர் தலைவர்களும் அதிகார மாற்றம் குறித்து விவாதிப்பார்கள்.

“இது அன்வார் மற்றும் அவருடன் உறுதியாக நிற்கும் பிற தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நற்பெயரை கழங்கப்படுத்துவதற்காக செய்யப்படும் முயற்சி” என்று அப்சைனிசாம் ரஹ்மான் கூறினார்.

“இதுபோன்ற ஒரு அரசியல் விளையாட்டு என்பது மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையில் பதற்றம், சண்டை மற்றும் வேறுபாடுகளை உருவாக்குவதற்கும், அமைதியான அதிகார மாற்றத்தை அழிப்பதற்கும் வழி ஆகும்” என்று அவர் கூறினார்.