அதிகாரத்தை மாற்றும் தேதியை டாக்டர் மகாதீர் நிர்ணயம் செய்வார்.
அடுத்த நவம்பரில் தலைநகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டிற்குப் பிறகு பதவி விலகும் தேதியை தீர்மானிக்க பாக்காத்தான் கவுன்சில் கூட்டம் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் ஒப்படைத்தது.
புத்ராஜெயாவில் நேற்று நள்ளிரவு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதீர், பாக்காத்தான் ஹராப்பான் இம்முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது என்றார்.
“கட்சியின் எதிர்காலம் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். இரண்டு கருத்துக்கள் இருந்தன. கடைசியில் எல்லாம் என்னிடமே ஒப்படைக்கப்பட்டன. நான் என்ன சொல்கிறேனோ அதை அவர்கள் செய்வார்கள். மாற்றம் அபெக்கிற்குப் பிறகு நடக்கும்.
“காலக்கெடு எதுவும் இல்லை, நான் வெளியேற விரும்புகிறேனா இல்லையா என்பது என்னுடைய முடிவு. அதுதான் கட்சி என்மீது வைத்த நம்பிக்கை. கடவுளுக்கு நன்றி” என்று அவர் கூறினார்.
செய்தியாளர் கூட்டத்தில், டாக்டர் மகாதீருடன் அவரது அரசியல் வாரிசான அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் ஆகியோர் இணைந்தனர்.
PH கூட்டணியில் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு, டி.ஏ.பி. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் பெர்சத்து கட்சி தலைவர் முஹிதீன் யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும், பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில், டாக்டர் மகாதீர் பிரதமராக இருப்பதில் அனைவருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்றார் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம்
“துன் நாட்டை ஆளவும், பொருத்தமான நேரத்தை நிர்ணயிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கிடையில், நான் பொறுமையாக இருக்க வேண்டும்,” என்று அன்வர் கூறினார்.
மகாதீர் நேற்று இரவு கூட்டத்தில் சரவாக் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார். மோதல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இடங்களை ஏற்பாடு தீர்மானம் செய்யப்பட வேண்டும் என்றார்.
சரவாக் மாநிலத் தேர்தல்களை விவாதிக்க மற்றும் நெறிப்படுத்த PH ஒரு மாநாட்டைக் கூட்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, அடுத்த நவம்பரில் கோலாலம்பூரில் நடைபெறும் அபெக் உச்சி மாநாட்டிற்குப் பிறகு ராஜினாமா செய்வதாக டாக்டர் மகாதீர் பலமுறை உறுதியளித்திருந்தார்.
பிப்ரவரி 11ம் தேதி சரவாக் அறிக்கை, டாக்டர் மகாதீருக்கு ஆதரவாக ஒரு எம்.பி.க்கள் குழு தற்போது ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பில் (எஸ்டி) செயல்பட்டு வருவதாகக் கூறினர்.
இருப்பினும், எஸ்டி பிரச்சினையில் மகாதீரின் ஈடுபாட்டை அன்வார் மறுத்தார், ஆனால் பாஸ், அம்னோ மற்றும் பி.கே.ஆர். உறுப்பினர்களின் ஒரு குழு ஆகியவற்றின் முயற்சிகள் இதில் இருப்பதாகக் கூறினார்.
அன்வரின் சொந்தக் கட்சிக்குள் இரண்டு தனித்தனி எஸ்.டி.க்களை அடைய முயற்சிகள் நடந்தன – ஒன்று பி.கே.ஆர் தாலைவரை ஆதரிக்கிறது, மற்றொன்று டாக்டர் மகாதீர் ஆட்சி காலம் முடியும் வரை பிரதமராக இருப்பதற்காக.
பதவிக்காலம் முடியும் வரை நாட்டை வழிநடத்த டாக்டர் மகாதீருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் வரும் மார்ச்சில் பாஸ் திட்டமிட்டுள்ளது.