நேற்று நடந்த ஹராப்பான் கூட்டத்தில், அதிகார மாற்றம் குறித்து தேதியை நிர்ணயிக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் டாக்டர் மகாதீருக்கு அழுத்தம் கொடுத்தால் பெர்சத்து கட்சி, ஹராப்பானை விட்டு விலகும் என்று எச்சரித்தது.
பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமட் நேற்று இரவு நடந்த பாக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில், பிரதம மந்திரி மாற்றம் திட்டத்தை முடிவு செய்யும் தேதியை அவரே நிர்ணயம் செய்ய அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக புன்னகையுடன் அறிவித்தார். ஆனால் சபையின் கூட்டமே பதட்டமாக இருந்தது என தெரியவருகிறது.
பிரிவின் இரு தரப்பிலிருந்தும் மூன்று ஆதார நபர்கள் மலேசியாகினியுடன் பேசினர். ஹராப்பான் கட்சிகள், குறிப்பாக அமானா மற்றும் டி.ஏபி.பி., அன்வார் இப்ராஹிமிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ஒரு தேதியை நிர்ணயிக்க மகாதீரை கேட்டன என்பதை உறுதிப்படுத்தின.
இருப்பினும், கூட்டத்தில் இருந்த பெர்சத்து தலைவர்கள், மகாதீருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் பெர்சத்து, பக்காத்தான் ஹராப்பானை விட்டு விலகும் என்று டி.ஏ.பி மற்றும் அமானா தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்…