உத்தரவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ், தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 12 நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான தனது நடவடிக்கை உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாக இல்லை என்று கூறினார்.
“உள்துறை அமைச்சர் சொல்வது சரிதான். எந்தவொரு குழு அல்லது தனிநபர் ஒரு பயங்கரவாதி எனும் செய்திகளை வர்த்தமாணி வெளியிடுவதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ அவருக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறினார்.
அதற்கு பதிலாக, தாமஸ், Akta Pencegahan Wang Haram, Pencegahan Pembiayaan dan Hasil Daripada Aktiviti Haram (Amla) 2001 உள்ள காலக்கெடுவின் விதிமுறைகளை கவனத்தில் கொள்ள விரும்புவதாகக் கூறினார். இது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று அவர் கூறினார்.
நேற்று ஒரு அறிக்கையில், அட்டர்னி ஜெனரல், பயங்கரவாதக் குழுவை வர்த்தமாணி செய்ய உள்துறை அமைச்சரின் உத்தரவு “என்றென்றும் நிலைத்திருக்கும்” நோக்கமல்ல என்று அவர் கூறினார்.
“பிரிவு 66பி(9) Seksyen 66B(9), அமைச்சர் அவர் அளித்த உத்தரவை ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட இயக்கம் தொடர்ந்து வர்தமாணியில் இருக்க நியாயமான காரணங்கள் உள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டும்” மற்றும் அப்படி எந்தவொரு நியாயமான காரணங்கள் இல்லை என்றால் அமைச்சர் முடிவு செய்தால், அவர் உடனடியாக தனது முந்தைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
“எனவே, ஒரு பயங்கரவாதக் குழு அல்லது இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட உத்தரவுவை ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு முறை அமைச்சரால் சட்டபடி மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகவும் உள்ளது”.
“வன்முறை தொடர ஏதேனும் நடவடிக்கை அல்லது போக்கு ஏற்பட்டால், அந்த உத்தரவு தொடரப்படும்”.
“இல்லையெனில், அதுபோன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது குரிப்பிட்ட அந்த குழு அல்லது இயக்கம் செயல் இழந்துவிட்டது; நிறுத்தப்பட்டுவிட்டது அல்லது கலைக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்” என்று தாமஸ் நேற்று கூறினார்.
இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2009ல் LTTE செயல்படுவதை நிறுத்தியது.
LTTE வர்தமாணி செய்யப்பட்ட காலமும் அரசு தரப்பு வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தாமஸ் கூறினார்.
LTTE ஒரு பயங்கரவாதக் இயக்கமாக 2014 நவம்பரில் மட்டுமே அறிவிக்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது 2014 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடவடிக்கைகள் சுமத்தப்பட்டன.
“அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சாட்ட முடியாது என்பது தெளிவாகிறது, ஏனெனில் அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் வர்தமாணி செய்யப்படவில்லை, இது குற்றச்சாட்டிற்கு தேவையான முக்கிய அம்சமாகும்.
“கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும், நவம்பர் 12, 2014 அன்று LTTE ஒரு பயங்கரவாதக் குழு என்று அறிவித்தது செல்லாது என்றும் அல்லது பிரிவு 66 பி (9) இன் கீழ் உத்தரவின் மறுஆய்வுபடி குறைந்தபட்சம் செல்லுபடியாகாது என்றும் வாதிடலாம்” என்று தாமஸ் நேற்று தெரிவித்தார்.
முன்னதாக, LTTE ஒரு பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்து கருத வலுவான காரணங்கள் இருப்பதாகவும், வர்தமாணி உத்தரவு அவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அட்டர்னி ஜெனரல் முடிவில் அல்ல என்றும் முகிதீன் கூறினார்.