மற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு அழைப்பு விடுத்ததை மறுத்துள்ளது

மற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு அழைப்பு விடுத்ததை மறுத்துள்ளது

பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம், பிரதமர் ஆவதற்கான முயற்சியை ஆதரிக்க இன்று பிற்பகல் நடக்கும் பேரணிக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுவதை அன்வார் இப்ராஹிம் குழு மறுத்துள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், குழுவின் செயலாளர் அஸ்மி முகமட் நோர் அவர்கள் எந்த வகையான பேரணிகளிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

“இது அன்வாரின் நல்ல பெயரைக் களங்கப்படுத்தும் ஒரு தீங்கிழைக்கும் அவதூறு செயலாகும்” என்று அஸ்மி கூறினார்.
அந்த போலி அறிவிப்பு ஆதரவாளர்கள் “”Reformasi 2020”-க்கு தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

சோகோ ஷாப்பிங் சென்டரில் கூடி பின்னர் தேசிய மசூதிக்கு அணிவகுத்துச் செல்வர் என்றும், அப்துல் ரசாக் இஸ்மாயில், ஏசாம் முகமட் நூர், ஃபரிஸ் மூசா மற்றும் செலயாங் எம்.பி. வில்லியம் லியோங் ஆகியோரின் உரைகளும் உண்டு என்பதாக முன்பு அவர்களிடம் கூறப்பட்டது.

அப்துல் ரசாக் மற்றும் ஏசாம் இருவரும் சீர்திருத்த 1990களின் Reformasi இயக்கத்தின் போது முக்கிய பங்கு வகித்தனர்.
கூட்டணியின் மாற்றம் திட்டங்களைப் பற்றி விவாதிக்க பாக்காத்தான் ஹராப்பான் உயர்மட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூடினர். அதிலிருந்து, அன்வாருக்கு ஆதரவாக பேரணிக்கு அழைப்பு விடுத்த இரண்டாவது போலி அறிவிப்பு இதுவாகும்.

இறுதியில், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்த இறுதி முடிவை அவரே செய்வார் என்று முடிவு செய்யப்பட்டது.

அன்வருக்கு வழி வகுக்க “இரண்டு ஆண்டுகள்” அல்லது “மூன்று ஆண்டுகள்” கழித்து பதவி விலகுவதாக கூறிய மகாதீரின் முந்தைய உறுதிமொழியிலிருந்து மகாதீர் முரன்படுவதாகக் கூறப்படுகிறது.

ஹராப்பான் தொடர்ச்சியாக இடைத்தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து மகாதிர் விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு செமெனீ மற்றும் தஞ்சங் பியாவுக்கான இடைத்தேர்தலின் போது தனது இடங்களைத் தக்கவைக்கத் தவறியது மகாதீரின் பெர்சத்து கட்சி. இது அழுத்தத்தை இன்னும் அதிகரித்துள்ளது.