பிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது

பிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது

காலை 11.40: அன்வர் இப்ராஹிம் மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பு மகாதீரின் இல்லத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அமனா தலைவர் முகமட் சாபுவும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.

பிரதமரின் இல்லத்திற்குள் நுழைவு இடங்களில் டஜன் கணக்கான நிருபர்கள் உள்ளனர்.

காலை 11:35: தனது தலைமையகத்தில் இன்று ஒரு கூட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்களை மட்டுமல்லாமல், அதன் மத்திய செயற்குழு (சிஇசி) உறுப்பினர்களையும் டிஏபி அழைத்திருக்கிறது.

காலை 11.30: நாங்கள் இன்னும் அரசுதான் என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
இது வழக்கம் போல் வியாபாரம்.

இன்று காலை கோலாலம்பூரில் நடந்த அமைச்சக நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் சுள்கிப்லி அகமட், “நான் புரிந்துகொண்டதிலிருந்து, நாங்கள் இன்னும் அரசாங்கமாகவே இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லாத வரை நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறோம்.” என்றார்.

வெள்ளிக்கிழமை ஹராப்பான் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் நிலைக்க வேண்டும் என்பதே அமானாவின் நிலைப்பாடு என்று அவர் மேலும் கூறுகிறார்.

அஸ்மின் கெராக்கானில் இணைகிறாரா? மாலை 4 மணிக்கு கூட்டம்

காலை 11 மணி: டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கட்சி தலைமையகத்திற்கு வருகிறார்.

“நாங்கள் பிறகு ஒரு சந்திப்பைக் நடத்துகிறோம்,” என்று அவர் நுழைவாயிலில் உள்ள ஊடகங்களுக்குச் சொல்கிறார், மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, டிஏபி மத்திய நிர்வாக உறுப்பினர் சோங் எங் ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்வதாக கூறுகிறார்.

காலை 10.45: ஜெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் அதன் கட்சி தலைமையகத்தில் மாலை 4 மணிக்கு மத்திய குழு கூட்டத்தை நடத்தும் என்பதை உறுதிப்படுத்தினார்

அஸ்மின் அலி மற்றும் அவரது பிரிவு கெராக்கானுடன் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிப்பதே நிகழ்ச்சி நிரலில் முக்கிய அங்கம் என்று அவர் மலேசியாகினியிடம் கூறுகிறார்.

“இது நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும், ஆனால் நாங்கள் முக்கியமாக அரசியல் நிலைமை குறித்து விவாதிப்போம். அரசாங்க மாற்றம் ஏற்படும் போது எங்களின் பங்கு என்ன என்பது பற்றி பேசுவோம்” என்று அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், கெரக்கானுடன் சேர அஸ்மினும் அவரது குழுவும் விண்ணப்பித்திருக்கிறார்களா அல்லது இன்று கூட்டத்தில் அக்குழு கலந்து கொள்ளுமா என்று கேட்டபோது கருத்து தெரிவிக்க லாவ் மறுத்துவிட்டார்.

பிரதம மந்திரி அலுவலகத்தில் டாக்டர் மகாதீர் இல்லை – அன்வார், வான் அஜிசா, குவான் எங் பிரதமரின் இல்லத்திற்கு சென்றனர்

காலை 10.50: அன்வார் இப்ராஹிம், டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் பிரதம மந்திரி அலுவலகத்திற்கு வந்தபோது மகாதீர் அங்கு இல்லை என்று பிரதமர் அலுவலகத்தின் ஆதாரங்களில் இருந்து மலேசியாகினி அறிந்து கொண்டது.

இந்த மூவரும் செரி கெம்பங்கனில் உள்ள மகாதீரின் இல்லத்திற்கு செல்கிறார்கள் என்பது தெரிகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெர்சே (Bersih) அலுவலகத்தில் கூடிவருகின்றன

காலை 10.49: மாலை 4.30 மணிக்கு பெர்சேஅலுவலகத்தில் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து வருகின்றன என்று Centre to Combat Corruption and Cronyism/ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்க்கும் நிர்வாக இயக்குனர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.

“அன்வார் அகோங்கைச் சந்தித்த உடனேயே நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவோம். காத்திருங்கள்” என்று சிந்தியா கேப்ரியல் கூறுகிறார்.

டோனி புவா DAP தலைமையகத்திற்கு வருகிறார்

காலை 10 மணி: திட்டமிடப்பட்ட மத்திய செயற்குழு (சி.இ.சி) கூட்டத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, டிஏபி தேசிய செயலாளர் டோனி புவா கோலாலம்பூர் புடுவிலுள்ள கட்சி தலைமையகத்திற்கு வருகிறார்.

அவர் 12 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு இங்கு வந்து இருக்கிறாரா என்று ஊடகங்கள் கேட்டபோது “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். மேலும் அவர் இன்று “மற்ற விஷயங்களுக்காக”/வேலைக்கு வந்துள்ளார் என்றும் கூறினார்.

குளுவாங் எம்.பி. வோங் சு குயியும் காலை 9.30 மணியளவில் வருவதைக் காணலாம்.

அன்வார், குவான் எங் மற்றும் சையத் சதிக் பிரதம மந்திரி அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார்கள்

காலை 10.25 மணி: அன்வார் மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் பெர்டானா புத்ராவை விட்டு வெளியேறினர், பத்திரிகைகளிடம் பேச தங்கள் வாகனங்களை நிறுத்தவில்லை.

சில நிமிடங்களுக்கு முன்னர், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மானும் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார்.

காலை 10.20 மணி: பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதீன் இன்று தனது மந்திரி நிகழ்வுகள் அனைத்தையும் தவிர்த்து வருவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அன்வார் மகாதீரை சந்திக்கிறார்

காலை 9.30: பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவை சந்தித்து சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க முடிவு.

அன்வர் மற்றும் அவரது மனைவி, துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், இன்று மதியம் 2 மணிக்கு யாங் டி-பெர்துவான் அகோங்கை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.கே.ஆர் மற்றும் டி.ஏ.பி இருவரும் மதியம் அவசர கூட்டங்களை திட்டமிட்டுள்ளனர்.

காலை 9.15 மணி: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மகாதீருக்கு முழு கால அவகாசம் வழங்குவதை ஆதரிக்கும் சட்டரீதியான அறிவிப்பில் (SD) கையெழுத்திட்டதாகக் கூறும் அறிக்கையை மறுத்துள்ளார்

மரியா சின், பின்கதவு அரசாங்கம் வேண்டாம் என்று கூறுகிறார், பி.கே.ஆரை விட்டு விலகமாட்டார் என்று உறுதியளித்தார்

காலை 8.45 மணி: ஆளும் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்காளர்களால் ஒரு ஆணை வழங்கப்பட்டதாகவும், நிர்வாகத்தில் எந்த மாற்றங்களும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இருக்கக்கூடாது என்பதையும் எம்பாட் மரியா சின் அப்துல்லா நினைவுபடுத்தியுள்ளார்.