ஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து கட்சியிலிருந்தும் விலகினார் மகாதீர்

ஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து கட்சியிலிருந்தும் விலகினார் மகாதீர்

பெர்சத்து, பக்காத்தான் ஹராப்பானை விட்டு விலகுவதாக கட்சித் தலைவர் முகிதீன் யாசின் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு டாக்டர் மகாதீர் முகமட் பெர்சத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக, மகாதீர், பிரதமர் பதவி ராஜினாமா கடிதத்தை அரண்மனைக்கு சமர்ப்பித்தார்.

பிரதம மந்திரி மற்றும் பெர்சத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்த மகாதீர் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

முகிதீன் மற்றும் பிறருடன் முரண்பாடு உள்ள காரணத்தால் பெர்சத்துவிலிருந்து அவர் வெளியேறுகிறார் என்ற ஊகமும் தோன்றுகிறது.

இதற்கிடையில், , அம்னோவுடன் இணைந்து பணியாற்ற விரும்பாத்தால் மகாதீர் தான் நிறுவிய கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார் என்று தி எட்ஜ் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளது.