இன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர் மகாதீரை மீண்டும் பிரதமராக நியமிக்க முடிவு

இன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர் மகாதீரை மீண்டும் பிரதமராக நியமிக்க முடிவு

பாக்காத்தான் ஹராப்பானின் உயர் கவுன்சில் இன்று இரவு அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது. அதில் டாக்டர் மகாதீர் முகமதுவை தொடர்ந்து பிரதமராக நியமிக்க டிஏபி உறுதியளித்துள்ளது.

“ஊழல் நிறைந்த அம்னோவுடன் இணைந்து பணியாற்ற மறுத்த மகாதீரை தனது கட்சி பாராட்டுகிறது” என்று, இன்று நடந்த டிஏபி தலைமைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் ஒரு அறிக்கையில், கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“நான் இன்று காலை துன் மகாதீரை அவரது இல்லத்தில் பார்த்தேன். அவர் ராஜினாமா செய்வதற்கான தனது விருப்பத்தை எனக்குத் தெரிவித்தபோது ஆச்சரியமாக இருந்தது….”

” ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அம்னோ தலைவர்களுடன் ஒத்துழைக்க மறுக்கும் துன்னின் கொள்கையை டிஏபி பாராட்டுகிறது, என்று லிம் கூறினார்.

ஊழலை எதிர்த்துப் போராடும் கொள்கையுடன் பதவி விலகிய முதல் மலேசிய பிரதமர் என்றும் மகாதீரைப் பாராட்டினார்.

இதேபோல், அமானா தலைவர் முகமட் சாபு, மகாதீரை அமைச்சராக தொடர தனது கட்சி ஆதரிப்பதாக அறிவித்தார்.

“மலேசியாவின் பிரதமரான மகாதீருக்கு நாங்கள் முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம் என்பதையும், பாக்காத்தானை தொடர்ந்து வழிநடத்துவதையும் அமானா உறுதிப்படுத்த விரும்புகிறது”.

“இந்த அரசியல் கொந்தளிப்பைக் கடந்து செல்ல சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் துன் மகாதீருக்கு வலிமை அளிக்கட்டும்” என்று அவர் கூறினார்.

அவரது ராஜினாமா குறித்து விவாதிக்க மகாதீர் இன்று பிற்பகல் அகோங்கை சந்திக்க உள்ளார்.