மகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்

அரசருடன் 90 நிமிட சந்திப்புக்குப் பிறகு டாக்டர் மகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

மாலை 6.18 மணி: பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுடன் 90 நிமிட சந்திப்புக்குப் பின்னர் டாக்டர் மகாதீர் முகமட் இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்.

வாயிலுக்கு வெளியே கூடியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து அவர் கையசைத்தார்; புன்னகைத்தார்.

மகாதீர் அரண்மனையை அடைந்தார்

மாலை 5.30 மணி: பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தனது கட்சி தலைமையகத்திலிருந்து வெளியேறினார். அவர் PH கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று செய்தியாளர்களிடம் கூறினார், ஆனால் கூட்டத்தின் இடத்தை வெளியிடவில்லை.

மாலை 5.20 மணி: பாடாங் ரெங்காஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் இப்போது வெளிநாட்டில் இருப்பதால், எந்த சட்டரீதியான அறிவிப்பிலும் கையெழுத்திடவில்லை என்று மலேசியாகினியிடம் கூறுகிறார்.

நட்பின் அடிப்படையில் தான் அன்வாரை தனிப்பட்ட முறையில் ஆதரித்ததாகவும், அவர் “ஒரு அசாதாரண அரசியல்வாதி” என்றும் அவர் கூறினார்.

மாலை 5.04: தற்போதைய அரசியலின் நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் அவ்வாறு செய்ய மாட்டார் என்று தெரிகிறது. இந்த நேரத்தில் நிலைமை மிகவும் நிலையற்றதாக உள்ளது என்றார்.

“தெளிவான தகவல் இல்லாததால், ஊடக அறிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

மாலை 4.45 மணி: டாக்டர் மகாதீர் முகமட் அரண்மனைக்கு சென்று, பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை சந்திக்க வருகிறார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை அவர் சமர்ப்பித்த பின்னர் இன்று பிற்பகல் சந்திப்பு நடக்கிறது.

கட்சியின் தலைவர் முகிதீன் யாசின், பாக்காத்தானை விட்டு வெளியேறுவதற்கான தங்கள் நடவடிக்கையை அறிவித்த சிறிது நேரத்திலேயே மகாதீர் பெர்சத்து தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

மாலை 4.40 மணி: டாக்டர் மகாதிர் முகமட் பிரதமராக தொடரவும், நாட்டின் பொறுப்பாளராக பாக்காத்தானை கொண்டு செல்ல பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனேவாசன் எதிர்பார்க்கிறார்.

மே 9, 2018 அன்று இந்த நாட்டு மக்கள் மகாதீர் தலைமையிலான பாக்காத்தானுக்கு அரசாங்கமாக ஆணை பிறப்பித்ததாக அவர் கூறினார்.

இன்றுவரை, அந்த ஆணை மாறவில்லை என்றார்.

அம்பிகாவின் கூற்றுப்படி, கடந்த இரண்டு நாட்கள் நடந்ததைக் கொண்டு, மகாதீரின் தலைமை மக்களை ஒன்றிணைத்து வலுவாக ஆணையை நிறைவேற்ற முடியும் என்று நம்புவதாக கூறுகிறார்.

“மக்களும் நாடும் எப்போதும் முன்னுரிமை பெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மாலை 4.30 மணி: இன்றிரவு பாக்காத்தான் ஒரு அவசர கூட்டத்தில் சந்திக்கும் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாலை 4.25 மணி: யாங் டி-பெர்துவான் அகோங்கை சந்திக்க டாக்டர் மகாதீர் முகமட் தனது வீட்டை விட்டு கிளம்பினார்.