இன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல் – மாமன்னர்

இன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல் – மாமன்னர்

சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா அவர்களே இன்று முதல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேர்காணல் செய்யவுள்ளார் என்று என்று அவரது உயர்நிலை ராயல் ஹைனஸ் அஹ்மத் ஃபதில் ஷம்சுதீன் தெரிவித்தார்.

43 (2) (a) பிரிவுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிக ஆதரவு உள்ள ஒருவரை பிரதமராக மாமன்னர் நியமிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்றும் நாளையும் என்ன நடக்கும் என்றால், மாமன்னருடன் ஒரு தனிப்பட்ட நேர்காணலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள். இது மிக எளிதாக அமையும். ஒவ்வொறுவரும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை கொடுக்கப்படும்” என்று கூறினார்.

மதியம் 2.30 மணிக்கு அது தொடங்கும் என்று அஹ்மத் ஃபாடில் கூறினார்.

“90 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடங்கும். அனைவரும் அழைக்கப்படுவார்கள்.

“வரிசை முறையில் அவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

நேர்காணலின் போது அரசாங்க பொதுச்செயலாளர் மொஹமட் ஜுகி அலி சாட்சியாக செயல்படுவார் என்று அவர் கூறினார்.

அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தி நேர்காணல் செய்வது இதுவே முதல் முறை என்று அஹ்மத் ஃபாடில் மேலும் கூறினார்.

இன்றைய நேர்காணல்கள் இரவு 7 மணி வரை தொடரும் என்றும் அது நீட்டிக்கப்படலாம் என்றும் அஹ்மத் ஃபாடில் கூறினார்.

“மாமன்னர் Perlembagaan Persekutuan/மத்திய அரசியலமைப்பின் படி செயல்படுகிறார். பெரும்பான்மை ஆதரவுடன் கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.