நாள் 4 – அரசியல் திருப்பங்கள் தொடர்கின்றன

அரசியல் திருப்பங்களை இன்றும் எதிர்பார்க்கலாம்…

ஹிஷாமுதீன் அம்னோவை விட்டு விலகவில்லை

காலை 8.00 மணி: முன்னாள் அம்னோ துணைத் தலைவர் ஹிஷாமுதீன் ஹுசைன் தான் கட்சியை விட்டு விலகுவதாக வந்த செய்தியை மறுத்து, அம்னோ மற்றும் பாரிசான் மீதான தனது விசுவாசத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்.

‘ஒருமைப்பாட்டு அரசாங்க’ உருவாக்குவதை அம்பிகா ஆதரிக்கிறார்

காலை 7.50 மணி: ‘ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை’/unity government அமைப்பது நாடு எதிர்கொள்ளும் அரசியல் குழப்பத்தை தீர்க்க உதவும் என்று முன்னாள் பெர்சே தலைவர் எஸ்.அம்பிகா ஒப்புக்கொள்கிறார்.

“நான் ஒற்றுமை : ‘ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின்’ அல்லது அமைச்சரவையின் ஆதரவாளர். நமக்கு அது அவசியம் தேவை”.

“மக்கள் நலன்களுக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அது வலியுறுத்ததும். அதில் வெவ்வேறு மாதிரிகள் உள்ளன, பொருத்தமான ஒன்றை வெற்றிகரமாக அமைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

பாரிசான் மற்றும் பாஸ் கட்சிகள் உடன்படாத சில விதிமுறைகள் இருந்தபோதிலும், ‘ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை’ நிறுவ மகாதீர் யோசித்து வருவதாக யூகங்கள் பரவி வருகின்றன, இதனால் அந்த இரு கட்சிகளும் நேற்று மகாதீருக்கு ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கின.

பின் கதவு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக வாரீசன் இருந்ததை லீ மறுக்கிறார்

காலை 7.30 மணி: வாரிசன் நிரந்தரத் தலைவர் லீவ் வு கியோங் தனது கட்சி ஒரு பின் கதவு அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதி இல்லை என்று மறுத்தார்.

“நான் நாட்டின் பொய்காரர்கள், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களுடன் வேலை செய்யப் போவதில்லை. நான் அவர்களுடன் ஒருபோதும் என்னை இணைத்துக் கொள்ள விரும்பமாட்டேன். எந்த பதவியும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மற்றவர்கள் அந்த பதவியை ஏற்றுக்கொள்வார்கள்”.

“என்னைப் பொறுத்தவரை, நேர்மை, உண்மை என்பது முக்கியம். மக்களின் நலன்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை” என்கிறார் லீவ்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் வாரிசன் தலைவரும் சபா அமைச்சருமான ஷாஃபி அப்தால் காணப்பட்டார். அன்று தான் எதிர்க்கட்சிகளின் தலைவர்களான அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து தலைவர்கள் ஷெரட்டன் ஹோட்டலில் ஒரு கூட்டத்தை நடத்திய நாள்.

நாள் 4 – பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சி

காலை 7.20 மணி: ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘சதி’ முயற்சியைத் தொடர்ந்து நாடு அரசியல் நிலையற்று மூழ்கியிருக்கும் 4வது நாள் இன்று.

இருப்பினும், ஒரு முடிவு தோன்றுவதாகத் தெரிகிறது.

ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியுமா என்பதை அறியும் முயற்சியில் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இன்று பெர்சத்து மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து சந்திக்கிறார்.

இடைக்கால பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கியப் பின்னர் அம்னோ மற்றும் பாஸ் பொதுத் தேர்தல்களைக் கோரியுள்ளன.

ஹராப்பான் தலைவர்கள் மாமன்னரிடம் என்ன சொல்வார்கள் என்று குறித்து அமைதி காக்கின்றனர். ஆனால் இதுவரை அவர்கள் மகாதீரை ஆதரிப்பதில் இருந்து விலகுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

எவ்வாறாயினும், மன்னர் இன்று ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாக இல்லை.

மேலும் அரசியல் திருப்பங்களை இன்றும் எதிர்பார்க்கலாம்.