வுஹானிலிருந்து மலேசியர்கள் மீட்பு – இரண்டாவது விமானம் KLIAவில் தரையிறங்கியது

கொரோனா வைரஸ் | மலேசியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வுஹான் மற்றும் சீனாவின் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்ற அனுப்பிய இரண்டாவது விமானம் பாதுகாப்பாக மலேசியா திரும்பியுள்ளது.

ஏர் ஏசியா விமானம் ஏ.கே .8265 காலை 6.50 மணியளவில் KLIA விமான நிலையத்தில் தரையிறங்கியது, கோவிட்-19 பாதிப்பின் மையப்பகுதியான வுஹானிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட 75 பேரில் 66 பேரை ஏற்றிக்கொண்டு திரும்பியுள்ளது. இன்றுவரை உலகளவில் 2,700க்கும் அதிகமானோர் கோவிட்-19 பாதிப்பினால் கொல்லப்பட்டனர். 80,000க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா)/The National Disaster Management Agency (Nadma) மேலும் 9 பேர் உடல்நலக் காரணங்களால் விமானத்தில் ஏற முடியவில்லை என்றும், ஒரு நபர் விமான நிலையத்திற்கு வர முடியவில்லை என்றும், மற்றொருவருக்கு வேலை உள்ள காரணத்தால் வர முடியவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியது.

விமானத்தில் இருந்த மற்றவர்களில் 12 விமானக் பணியாளர்கள், ஒன்பது மலேசிய அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் அடங்குவர்.

வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத் சோதனைகள் தவிர, வெளியேற்றப்பட்டவர்கள் KLIAவில் உள்ள வான் பேரழிவு பிரிவில்/ the Air Disaster Unit, KLIA-வில் மேலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக சிரம்பான் நிலாயில் உள்ள உயர் கல்வி தலைமைத்துவ அகாடமிக்கு / Higher Education Leadership Academy (Akept) அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால், சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் சரிவு, பிரதமர் பதவி விலகல் மற்றும் அவரது அமைச்சரவை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் தற்போதைய அரசியல் மாற்றங்கள் இருந்தபோதிலும், இரண்டாவது வெளியேற்ற முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று நேற்று உறுதிப்படுத்தியது.

டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் சுகாதார அமைச்சராகவும், டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் துணை பிரதமராக வெளியேறிய போதிலும் பணிகள் தொடரும் என்றது.