டாக்டர் மகாதீர்: அம்னோவுடன் பெர்சத்து இணைவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

டாக்டர் மகாதீர்: அம்னோவுடன் பெர்சத்து இணைவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

அம்னோவுடன் தனது கட்சி சேருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் டாக்டர் மகாதிர் முகமட் திங்களன்று ராஜினாமா செய்தார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய மகாதீர், இன்னும் நேரம் வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரித்து, பெர்சத்து மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிப்ரவரி 24ம் தேதி பாக்காத்தான் ஹராப்பானை விட்டு வெளியேற முடிவு செய்தனர் என்றுள்ளார்.

“அதனுடன், ஹராப்பான் அரசாங்கம் தகர்க்கப்பட்டது. பெர்சத்து, பாஸ் மற்றும் அம்னோவை ஆதரித்தால், தோல்வியடைந்த கட்சிகள் மீண்டும் அரசாங்கத்தை உருவாக்கும்.

“பின்னர் அரசாங்கத்தை அம்னோ ஆதிக்கம் செலுத்தும், ஏனெனில் அது மிகப்பெரிய கட்சி” என்று அவர் கூறினார்.

அதனால், அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் முடிவை நாடாளுமன்றத்திற்கே விட்டு விடுவதாக மகாதீர் கூறினார். இருப்பினும், தேவைப்பட்டால் தொடர்ந்து இருக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

” எனக்கு ஆதரவு இருக்கிறது என்பது உண்மை என்றால், நான் மீண்டும் வருவேன். இல்லையென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட எவரையும் நான் ஏற்றுக்கொள்வேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு மகாதீர் பொதுமக்களிடம் உரையாற்றுவது இதுவே முதல் முறை.

அவர் தற்போது அரசாங்கம் இல்லாமல், இடைக்கால பிரதமராக உள்ளார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாமன்னர் பேட்டி கண்டார். பெரும்பான்மை ஆதரவைக் பெற்றவர் என்ற அடிப்படையில் மாமன்னர் ஒரு பிரதமரை நியமிக்க முடியும்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்றால், பிரதமர் அறிவுறுத்தலால் மாமன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் (அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை மேலும் நிலைநிறுத்திக் கொள்ளும் வரை மாமன்னர் காத்திருப்பார்).