மகாதீர், மிகவும் சுயநலமான மனிதர் – ஜைட் இப்ராஹிம்

மிகவும் சுயநலமான மனிதர்
ஜைட் இப்ராஹிம்

COMMENT | சுயநல ஆசைகளை தேசிய நலன்களைப் போல சித்தாரிக்கும் கலை தான் அரசியல். தாமஸ் சோவெல் (Thomas Sowell) இதை பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். ஆனால் கடந்த வாரத்தில் அரசியல் நாடகத்தைக் கண்டதும் தான் இது மிகவும் உண்மை என்று புரிகிறது. என்ன நடந்தது என்பதிலிருந்து, டாக்டர் மகாதீர் முகமது உண்மையிலேயே ஒரு சுயநலமான மனிதர் என்று புரிகிறது. நாட்டின் வரலாற்றில் ஒப்பிடமுடியாத அளவிற்கு இவர் ஒரு சுயநலமான மனிதர் என்பது எனது கருத்து.

அவர் ஏன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? இனி தான் ஒரு பிரதமராக இருக்க விரும்பவில்லை என்ற முடிவினால் அல்ல! அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் ஒரே நேரத்தில் நீக்குவதற்கான வழி இதுதான்.

ஒரு பிரதமர் பதவி விலகும்போது, அமைச்சரவையும் இருக்காது. அது சுயநலமான ஒரு செயல். அவர் தனது ராஜினாமாவை சிம்மாசன ஆட்டதிற்கான ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடாது. நாம் பொது அலுவலகத்துடன் விளையாடக்கூடாது. சேவை செய்வதற்கும் நல்லது செய்வதற்கும் கிடைத்த வாய்ப்பாக அதை மதிக்க வேண்டும்.

மாமன்னர் தன்னை ஒரு இடைகாலப் பிரதமராக நியமித்ததை அவர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. ஏனென்றால், ஒரு உண்மையான இடைகாலப் பிரதமர், ஒரு புதிய பிரதமரை நியமிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார். இது தேர்தல் மூலமாகவோ அல்லது பெரும்பான்மை ஆதரவைக் பெற்றிருப்பவர் யார் என்பதை அறியும் சிறந்த வழிகளை மன்னருக்கு அறிவுறுத்துவதன் மூலமாகவோ அவர் இதைச் செய்யலாம். அவர் தனது சொந்த ஏற்றத்திற்காக வசதி செய்யக்கூடாது. எந்தவொரு இடைக்கால பிரதமரும் தனது சொந்த அதிகாரத்தை கைப்பற்ற உதவிகொள்வதைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? அப்படி யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? நாகரிக உலகில் அப்படி யாரும் இல்லை. இப்படி ஒரு கேள்விக்குரிய நடத்தையில் மலேசியா, உலகில் முதல் இடத்தில் உள்ளது.

அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே, மீண்டும் பிரதமராகும் விருப்பத்தை மகாதீர் அறிந்திருந்தார். அவர் தனது நலனுக்காக இடைகால பராமரிப்பாளர் பதவியைப் பயன்படுத்தக்கூடாது. இதை விட ஒருவர் சுயநலமாக இருக்கவே முடியாது.

பெர்சத்து கட்சி, பக்காத்தான் ஹராப்பானை விட்டு விலகுவதற்கான முடிவு எடுக்கப்பட்டபோது அவர் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதன் மூலம் பாராளுமன்றத்தில் ஹராப்பான் எம்.பி.க்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும் என்று அறிந்தும், ஹராப்பானை ஒரு பிணைப்பில் வைத்தார். அன்வார் இப்ராஹிம்) பிரதமராகும் வாய்ப்பை மறுப்பதற்காகவே அவர் இதைச் செய்துள்ளார் (எந்தப் பயனும் இல்லை என்று கருதுகிறேன்).

இது, அவரைப் பிரதமராக்கிய தன் முன்னாள் கூட்டாளிகும் அவர் இழைத்த மற்றொரு சுயநல துரோகம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஹராப்பான் மகாதீரை எப்போதும் புகழ்பாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு செய்வதில் எவ்வளவு முட்டாள்தனமகத் தெரிந்தாலும் கூட அவர்கள் தொடர்ந்து மகாதீருக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தனர். (ஷெரட்டன் சதித்திட்டத்திற்கு மகாதீர் பொறுப்பேற்கவில்லை என்று ஹராப்பான் மீண்டும் மீண்டும் சொன்னதை நினைவில் கொள்க.)

மிகவும் சுயநலமிக்க ஒரு மனிதரை இடைகாலப் பிரதமராக நீக்குவதன் மூலம் நாட்டிற்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க, மாமன்னருக்கு ஆதரவளிக்குமாறு மலாய் ஆட்சியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அன்வார் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆதரவைக் கொண்டிருந்தால், அவர் இன்று பதவியேற்க வேண்டும். இல்லையென்றால், எவ்வளவு விரும்பத்தகாத, செலவுல்ல, வேதனையளிக்ககூடியதாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு தேர்தலை நடத்துவோம்!