பாக்காத்தான் – மகாதீர், ஒத்துப்போவார்களா?
இன்று பிற்பகல் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டத்தில், இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பேச்சுவார்த்தை எழுப்ப வேண்டும் என்ற எந்தவொரு பிரச்சினையும் எழவில்லை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீருடன் PH பேச்சுவார்த்தை நடத்துமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “இல்லை, அப்படி ஏதும் எழவில்லை” என்று அவர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவின் ஈஸ்டின் ஹோட்டலில் PH தலைவர்களுடன் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், தனது முன்னாள் கூட்டணியான பெர்சத்து உடனான PHஇன் உறவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெர்சத்து கோரிக்கை விடுத்தால், அதனை மீண்டும் PH-ல் இணைத்துக்கொள்வீர்களா, ஏற்க தயாராக இருக்கிறதா என்று கேட்டபோது, “நாங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
மகாதீரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து PH உடைந்துவிட்டதா என்று கேட்டதற்கு, அன்வார் அக்கூட்டணி இன்னும் நல்ல நிலையில் இருப்பதாக உறுதியளித்தார்.
“இல்லை. அவர் (டாக்டர் மகாதீர்) PHஐ விட்டு வெளியேறிய போதும் நாங்கள் இன்னும் PH ஆகத் தான் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
தனது கட்சி பெர்சத்து, பாரிசான், பாஸ், ஜி.பி.எஸ், பல பி.கே.ஆர் எம்.பி.க்களில் சிலர் மற்றும் வாரிசான் ஆகிய கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்த பி மகாதீர் திங்களன்று, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கட்சியின் தலைவர் முகிதீன் யாசின் பெர்சத்து PHஐ விட்டு வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து அவர் பெர்சத்து தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
புதிய கூட்டணி மகாதீரை பிரதமராக தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது, ஆனால் மகாதீர் அம்னோவுடன் ஒத்துழைக்க முடியாது என்று கூறினார்.
நேற்று அவர் பெர்சத்து மற்றும் PH கட்சியில் உள்ள பல எம்.பி.க்கள் இணைந்து, அரசாங்கத்தை வீழ்ச்சியடையச் செய்தார்கள் என்பதை ஒப்புக் கொண்டார்.
பெர்சத்துவின் மற்ற தலைவர்கள் மகாதீரை தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் வேண்டாமென்று முயற்சித்தார்கள். இன்று அவர் இறுதியாக ஒப்புக் கொண்டதாக அறிவித்தார்.
PH தலைவர்கள் மகாதீரை PH அரசாங்கத்தை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் மகாதீர் கட்சி அடிப்படையிலான ஒரு ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை நிறுவ வலியுறுத்தியுள்ளார்.
இதன் விளைவாக, PH மற்றும் மகாதீர் இனி ஒத்துப்போவதாகத் தெரியவில்லை.