கண்ணியத்துடன் வெளியேற மகாதீருக்கு கடைசி வாய்ப்பு

கண்ணியத்துடன் வெளியேற மகாதீருக்கு கடைசி வாய்ப்பு
சார்லஸ் சாண்டியாகோ

அமைச்சரவை உறுப்பினர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; கட்சி அடிப்படையில் அல்ல, என்ற அவரது ஆலோசனையானது மக்களின் ஆதரவை பெரும்.

இந்த யோசனை காகிதத்தில் மிகவும் நம்பத் தகுந்ததாகத் தெரிகிறது. இது மக்களை மையமாகக் கொண்ட ஒன்றாகத் தோன்றுகிறது. அரசாங்கத்திற்குள் போரிட்டுக் கொண்ட்டிருக்கும் பிரிவினர்களையும் தள்ளி வைக்கும்.

ஆனால் இது செயல்படாது. எல்லா அதிகாரங்களையும் மகாதீரிடம் கொடுத்து இது அவரை மட்டுமே பலப்படுத்தும்.

மிக முக்கியமாக, மக்களின் விருப்பம் ஏதும் நிறைவேராது. ஏனெனில் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையிலோ அல்லது எந்த சீர்திருத்த முயற்சியிலே பொறுப்பு ஏற்க விருப்பம் கொள்ள மாட்டார்.

அவர் யாரை வேண்டுமானாலும் அமைச்சரவையில் தேர்வு செய்து நியமிக்கும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வார். அதில், அம்னோ மற்றும் பாஸ் அரசியல்வாதிகளும் அடங்குவர். அவர் ஒருமித்த கருத்தில் பணியாற்றவோ, ஹராப்பானுடன் கலந்தாலோசிக்கவோ விரும்பமாட்டார்.

சுருக்கமாக, இது ஒரு ‘தனி மனிதரின்’ ஆளுமையாக இருக்கும்; ஒரு மகாதீர் அரசாங்கமாக இருக்கும்; மேலும் மகாதீர் தனக்கு மட்டுமே பொறுப்புடையவராக இருப்பார்.

தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சீர்திருத்த முயற்சியின் அடிப்படையில் ஹராப்பானுக்கு வாக்களித்த மக்களுக்கு இது ஒரு துரோகம்.

கடந்த சில நாட்களாக நிகழ்வுகளின் பரபரப்பு, பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் ஆவதற்கு எந்தவொரு வேட்பாளரும் தனித்துவமான பெரும்பான்மையை பெறவில்லை என்றும், சிறப்பு அமர்வில் பாராளுமன்றம் பிரதமரை தேர்வு செய்யும் என்ற அறிவிப்புகளை, மன்னருக்கு பதிலாக மகாதீர் வெளியிட்டார்.

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உள்ளது என்று அரசியலமைப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாமன்னரின் நீண்ட நேர்காணல் செயல்முறை இருந்தபோதிலும், பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களால் பெறப்பட்ட எண்களை அரண்மனை வெளியிடவில்லை.

சபையின் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை பெறும் ஒருவரை ஏன் மாமன்னர் பிரதமராக நியமிக்கவில்லை என்பது தெரியவில்லை. பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த வாக்கு எண்களைக் கொண்டிருக்கலாம்.

இந்த நீடித்த குழப்பத்தில், அன்வார் மகாதீரிடமிருந்து பொறுப்பேற்க வேண்டும் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள்.

2018ஆம் ஆண்டில், மலேசியர்கள், மகாதீர் நாட்டுக்கு சரியானதைச் செய்வார் என்று நம்பி உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

அவர் இனி சர்வாதிகாரி அல்ல, சீர்திருத்தங்களை வழிவகுக்க உறுதியளித்த தலைவர் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் இரண்டே வருடங்களுக்குள், அவர் காய்களை நகர்த்தியுள்ளாரா என்று இப்போது கேள்வி எழுப்புகிறோம். ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஒரு சில நபர்களின் உதவியுடன் திட்டமிட்டவர் என்ற எண்ணம் தோன்றுகிறாது.

இன்னும் எல்லாவற்றையும் இழக்கவில்லை என்று நான் கருதுகிறேன். மக்களின் ஆணையை இழந்துவிட்டதால், அன்வார் எட்டாவது பிரதமராக வழிவகுத்துவிட்டு, மகாதீர் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வெளியேற இன்னும் ஒரு கடைசி வாய்ப்பு உள்ளது.

  • சார்லஸ் சாண்டியாகோ, கிள்ளான் எம்.பி.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் ஆசிரியர் / பங்களிப்பாளர் / படைப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.