இரண்டு முறை தோல்வியுற்ற மனிதனிடம் தேசத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்படக்கூடாது
வில்லியம் டி குரூஸ்
COMMENT | மூன்றாவது முறையாக மலேசியாவின் பிரதமராக திரும்ப முற்படும் மனிதன், மலேசியர்களின் பார்வையில் தார்மீக ரீதியாக நம்பிக்கையை இழந்துவிட்டார்.
வாக்குறுதிகள், உறுதிமொழிகள் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மதிக்காத மகாதீர், இப்போது தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய விரும்புகிறார் என்று மக்களை நம்புமாறு கேட்கிறார். மிகவும் துணிச்சலான நாடகம்.
திங்களன்று அவர் பதவி விலகியதிலிருந்து ஒவ்வொரு நாளிலும், அவர் பிரதமர் பதவியை ஏன், எதற்காக ராஜினாமா செய்தார் என்பது தெளிவாகிறது. அப்போதுதான் மலேசிய வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மிக எளிதாக மீற முடியும் எனும் காரணத்தால் தான்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து அவர் அளித்த உறுதிமொழிகள், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதற்கான பலமுறை வாக்குகள், இவை அனைத்தும் காணல் நீரைத் தவிர வேறில்லை.
புதன்கிழமை, சமீபத்திய கொந்தளிப்பின் அத்தியாயத்திலிருந்து தனது முதல் பொது உரையில், மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் பிரச்சாரம் செய்த ஊழல் நிறைந்த அம்னோவுடன் அவர் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டார் என்று நம் அனைவரையும் நம்ப வைத்தார்.
“நான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை”என்று அவர் வாதிட்டால், அவர் எப்போதுமே இப்படித்தான் பணியாற்றினார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். நாம் நம்ப விரும்பும் அனைத்தையும் அவர் நமக்கு உணர்த்துவதில் வல்லவர்.
அடுத்த சில நாட்களிலேயே, மீண்டும் பெர்சத்து கட்சியுடனும், பாஸ் மற்றும் அம்னோவுடன் இணைந்து அவர் ‘ஒற்றுமை அரசாங்கம்’என்ற சொற்களுக்கு ஒரு விபரீதமான அர்த்தத்தை கொண்டு வந்தார்.
பெர்சத்து தலைவர் முகிதீன் யாசினை, பிரதம மந்திரியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக இப்போது அவர் கூறியுள்ளார். 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாக்காத்தான் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த முகிதீன் யாசினும், அளித்த வாக்குறுதிகளைத் தூக்கி எறிந்து விட்டார்.
மகாதீர் இதேபோல் பி.கே.ஆரிடமிருந்து ஒரு கிளர்ச்சிப் பிரிவை வழிநடத்திய அஸ்மின் அலியை துணை பிரதமராக நியமனம் செய்தால் கூட நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
2023 ஆம் ஆண்டு வரை ஹராப்பான் கூட்டணியை ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்த 53 சதவீத வாக்காளர்களால் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் இவர்கள். அதே 53 சதவிகிதத்தினர் மகாதீர், முகிதீன், அஸ்மின் மற்றும் அவர்களின் துரோக கூட்டாளிகள், பாரிசானையும் அதை ஆதரித்த மத அடிப்படை கட்சியையும் வீழ்த்திவிடுவார்கள் என்று நம்பினர்.
அம்னோவைப் பொறுத்தவரையில், நாட்டை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த கட்சி என்று மகாதீரே குறியுள்ளதை நாம் கேட்டுள்ளோம். ஆனால், மகாதீர் அக்கட்சியின் உறுப்பினர்களுடன் அணிசேர முன்மொழிவதைப் இனி நாம் பார்க்கலாம்.
மகாதீரைப் பொறுத்தவரை, நேற்று எதிரி என்று சித்தரிக்கப்பட்டவர்களை, நாளை நாம் நம்ப வேண்டிய நண்பர்களாக கருத வேண்டும்.
மகாதீரைப் பொறுத்தவரை, “நாட்டிற்காக நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்காதீர்கள், “எனக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேளுங்கள் என்பததே எப்போதுமே இருக்கும்.
– வில்லியம் டி க்ரூஸ் – உலக பெர்சே இயக்கத்தின் முதல் தலைவராக வில்லியம் டி க்ரூஸ் இருந்தார்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் ஆசிரியர் / பங்களிப்பாளர் / படைப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.

























