மார்ச் 2-ஆம் தேதி சிறப்பு அமர்வு இருக்காது – சபாநாயகர்

மார்ச் 2-ஆம் தேதி சிறப்பு அமர்வு இருக்காது – சபாநாயகர்

நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோஃப் மார்ச் 2 ம் தேதி சிறப்பு அமர்வு இருக்காது என்று அறிவித்துள்ளது நடந்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மற்றொரு திருப்பத்தை சேர்த்துள்ளது.

இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்த கடிதம் தனக்கு கிடைத்ததாக முகமட் ஆரிஃப் தெரிவித்தார்.

“இருப்பினும், கடிதம், Standing Order 11 (3) ஐ பின்பற்றவில்லை என்றும், அது விவாதிக்கப்பட வேண்டிய முழுமையான அறிவிப்புடன் இல்லை என்றும் அவர் கூறியலள்ளார்.

“ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து மாமன்னர் யாங் டி-பெர்டுவான் அகோங்கிடமிருந்து ஒரு ஆணையைப் பெற்ற பின்னரே சிறப்பு அமர்வு நடக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

நேற்று, பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் எவருக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை என்பதை மாமன்னர் தெரிவித்தார் என்று மகாதீர் கூறினார்.

“தனித்துவமான பெரும்பான்மை இல்லாததால், அவர் (மாமன்னர்) இதை முடிவு செய்யக்கூடிய சரியான இடம் நாடாளுமன்றம் என்று கூறியுள்ளார்.

“எனவே அடுத்த பிரதமராக யாருக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது என்பதை தீர்மானிக்க அடுத்த மாதம் (அடுத்த திங்கள்) நாடாளுமன்றம் சிறப்பு அமர்வை நடத்தும்,” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்திலும் முடிவு எடுக்கப்பட முடியாமல் போனால், ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று மகாதீர் கூறினார்.

இருப்பினும், இடைக்கால பிரதமரின் அறிக்கையை பக்காத்தான் ஹராப்பான் மற்றும் முவாஃபாக்காட் நேஷனல் ஏற்க மறுத்துள்ளனர்.

கூட்டணியின் தலைவர்கள் இது தவறு என்று சுட்டிக்காட்டினர். அரசாங்கத்தை வழிநடத்த எந்த எம்.பி.க்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை தீர்மானிக்கும் செயல்முறையை மாமன்னர் இன்னும் முடிக்கவில்லை என்கின்றனர்.

தற்போதைய அரசியல் நெருக்கடியிலிருந்து விடுதலை பெற ஒரு புதிய தேர்தலை நடத்த அவர்கள் கேட்கின்றனர்.

அகோங் நியமனம் செய்தவுடன் பிரதமரின் ஆதரவை சோதிக்க மட்டுமே சிறப்பு நாடாளுமன்ற அமர்வு அழைக்கப்பட வேண்டும் என்று மற்ற அரசியலமைப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.