மலாக்கா அரசாங்கம் கவிழ்ந்தது
டிஏபி மற்றும் பி.கே.ஆரின் இரண்டு பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) பிரதிநிதிகளின் ஆதரவுடன் தேசிய கூட்டணி (Perikatan Nasional) மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் பெங்காலான் பாத்து சட்டமன்ற உறுப்பினர், “ஹல்க்” என்றும் அழைக்கப்படும் டிஏபியைச் சேர்ந்த நோர்ஹிசம் ஹாசன் பக்தி, மற்றும் பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஜெய்லானி காமிஸ், பி.கே.ஆரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பி.என் மற்றும் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜெய்லானி, அவர்கள் தங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்றும், ஆனால் புதிய மாநில அரசாங்கத்தை தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாகவும் கூறினார்.
பி.என் மற்றும் பெர்சத்து சட்டமன்றத்தில் இணைந்து புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்க இருவரும் ஒப்புக் கொண்டனர் என்று மலாக்கா அம்னோ தலைவர் அப்துல் ரவூப் யூசோ ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
“எங்களிடம் இப்போது 17 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்” என்று ரவூப் கூறினார்.
ரவூப், முன்னாள் முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் மற்றும் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் முகமட் ரபீக் நைசாமோஹிதீன் மற்றும் நூர் எஃபாண்டி அகமட் ஆகியோர் முன்னதாக மலாக்கா மாநிலத் தலைவர் முகமட் கலீல் யாகோப்பை சந்தித்து புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
பாக்காத்தான் கூட்டணியை கைவிட பெர்சத்து எடுத்த முடிவைத் தொடர்ந்து கடந்த வாரம் மலாக்கா பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது.