சராணியை மாநில அமைச்சராக பரிந்துரைக்கிறது பேராக் அம்னோ

சராணியை மாநில அமைச்சராக பரிந்துரைக்கிறது பேராக் அம்னோ

பேராக் அம்னோ அதன் தலைவரான சராணி முகமதுவை புதிய மந்திரி புசாராக பரிந்துரைத்துள்ளது.

கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினரான சராணியை மேற்கோள் காட்டிய ஆஸ்ட்ரோ அவானி, அவர்கள் பேராக் அரண்மனைக்கு வரவழைக்கப்பட காத்திருக்கிறார்கள் என்று கூறியது.

இந்த விவகாரம் குறித்து தற்போதைய மந்திரி புசார் பைசல் அஸுமுவுடன் விவாதித்ததாக அவர் கூறினார்.

பாஸ் மற்றும் பெர்சத்து, தங்களின் வேட்பாளர்களின் பெயர்களையும் இந்த பதவிக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

கடந்த வார அரசியல் நெருக்கடி முழுவதும் பேராக் அரசாங்கம் முதலில் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் இருந்தது.

எவ்வாறாயினும், பெரிகட்டன் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியின் பிரதமராக முகிதீன் யாசின் பதவியேற்ற பின்னர், மாநில அரசும் இதைப் பின்பற்றும் என்று பைசல் கூறினார்.

அம்னோ மற்றும் பாஸ் இணைந்து 28 இடங்களும், பெர்சத்துவிற்கு இரண்டு இடங்களும் உள்ளன. மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 30 இடங்கள் தேவை.

துவாலாங் சேகா சட்டமன்ற உறுப்பினர் நோலி ஆஷிலின் முகமட், சுயேட்சையாக இருக்கிறார், அவர் பெரிகட்டன் நேஷனலை ஆதரிப்பாரா என்று இன்னும் ஏதும் கூறவில்லை. அவர் முன்பு அம்னோவைச் சேர்ந்தவர்.