நஜிப்பின் எஸ்.ஆர்.சி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது

நாள் 87: நஜிப்பின் எஸ்.ஆர்.சி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதி முறைகேட்டு குற்றவியல் விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 87 நாட்களை எட்டியது.

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிருவனத்தில் 42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் குற்றவியல் வழக்கு கூடிய விரைவில் முடிவுக்கு வருகிறது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று, முஹம்மது ஷஃபி அப்துல்லாவின் குழு, திங்களன்று அவர்களது அனைத்து சாட்சிகளின் சாட்சியங்களையும் முடித்துவிடலாம் என்று பரிந்துரைத்தார்.

இன்றைய விசாரணையில், முன்னாள் எம்.ஐ.சி சட்ட ஆலோசகர் செல்வா மூக்கியா சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.