கூட்டணிகளை கைவிட்டு, அம்னோவுடன் பணிபுரிந்தால் பிரதமர் பதவியை வழங்குவதாக வாக்களித்தனர், அன்வார் உறுதிபடுத்துகிறார்
பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அம்னோவை ஏற்றுக்கொள்வதற்கு ஈடாக தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற ஒரு கூற்றை உறுதிப்படுத்தினார்.
“(அன்வார்) அரசியல் நெருக்கடிக்கு முன்னர் அவர் பிரதமராக பதவியேற்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தார் என்றும், அவர் பக்காத்தான் ஹராப்பானில் தன் அரசியல் கூட்டணிகளை கைவிட்டு, அம்னோ தலைவர்களை ஏற்றுக்கொண்டால் [ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வபர்கள் உட்பட] பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற உறுதியளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
“மக்களின் ஆணைக்கு துரோகம் செய்யாமல் அன்வார் பிரதமர் பதவியை மறுத்துவிட்டார்” என்று பி.கே.ஆரின் செத்தியாவாங்சா எம்.பி. நிக் நஸ்மி நிக் அகமது மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.
கடந்த வாரம், அஸ்மின் அலி, பெர்சத்து, அம்னோ, மற்றும் பாஸ் ஆகியவற்றுடன் பி.கே.ஆர், அமானா மற்றும் டிஏபி இல்லாமல் ஒரு அரசாங்கத்தை உருவாக்க சதி முயற்சியை மேற்கொண்டார்.
அப்போதைய பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமதுவை ராஜினாமா செய்து அன்வாருக்கு வழி வகுக்கும் முயற்சிகளைத் தடுக்கும் முயற்சியாக இது நியாயப்படுத்தப்பட்டது.
இருப்பினும், அம்னோவுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்று கூறி மகாதீர் ராஜினாமா செய்தார்.
மகாதீர் மற்றும் அன்வார் இறுதியில் ஒன்றாக இணைந்தனர், ஆனால் முகிதீன் யாசின் பெர்சத்து, அம்னோ, பாஸ் மற்றும் ஜி.பி.எஸ்ஸின் கூட்டணியில் – பெரிகாடன் நேஷனல் (பிஎன்) பிரதமராக பதவியேற்பதைத் தடுக்கமுடியவில்லை.
எம்.சி.ஏ தற்போதைய நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாமா என்பது குறித்து இன்னும் விவாதம் செய்து வருகிறது. எம்.சி.ஏ-க்கு இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர், கட்சியின் தலைவர் வீ கா சியோங் (ஏர் ஹித்தாம்) மற்றும் வீ ஜெக் செங் (தன்ஜோங் பியா). இரண்டு தொகுதிகளும் ஜோகூரில் உள்ளன.