தாமஸ்: பதவியில் இருந்தபோது அநீதியைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்

தாமஸ்: பதவியில் இருந்தபோது அநீதியைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்

முன்னாள் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) டாமி தாமஸ் பதவியில் இருந்தபோது, தனது கடைசி நாள் வரை, அநீதிகளைத் தடுக்க தன்னால் முடிந்தவரை முயன்றதாகக் கூறியுள்ளார்.

“நான் பதவியில் இருந்த கடைசி நாள் வரை நீதியை நிலைநாட்டவும் அநீதியைத் தடுப்பதற்கும் என்னால் முடிந்தவரை முயன்றேன். சேவை செய்வதற்கான பாக்கியத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் எஃப்.எம்.டி.க்கு தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே ஏ.ஜி. பதவியை ராஜினாமா செய்த தாமஸ், டாக்டர் மகாதீர் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக தான் அவ்வாறு செய்ததாக கூறினார்.

“ஏ.ஜி.யாக எனது நிலைப்பாடு, ஒரு அரசியல் நியமனம், மற்றும் அது டாக்டர் மகாதீரால் செய்யப்பட்டது.

“நான் பிரதமரால் நியமிக்கப்பட்டதால், பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தவுடன், நானும் அவ்வாறு செய்வது எனது பொறுப்பாகும். நான் விலகிப் போவதும், புதிய பிரதமர் தனது சொந்த ஏ.ஜி.யை நியமிக்க அனுமதிப்பதும் முக்கியம்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய பார் கவுன்சில் தலைவர் அப்துல் ஃபரீட் அப்துல் கபூர், ஓர் ஏஜியாகவும், பார் கவுன்சிலுக்கும், தாமஸின் சேவையை பாராட்டினார்.

“அவர் மிகவும் உதவியாக இருந்தார், மேலும் சட்டத் தொடர்பான பல்வேறு விஷயங்களில் பார் கவுன்சிலை ஆலோசித்தார். அவருக்கு பார் கவுன்சில் நன்று கூறிக்கொள்கிறது…”

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சி மற்றும் மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக, நாட்டின் அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் பிப்ரவரி 28 அன்று தாமஸ் தனது ராஜினாமாவை வழங்கியதாக கூறப்படுகிறது.