சுகாதார அமைச்சரை நியமிக்க பிரதமருக்கு வலியுறுத்தல்

அரசியலை ஒதுக்கி வைத்து, அவசரமாக சுகாதார அமைச்சரை நியமிக்க பிரதமருக்கு வலியுறுத்தல்.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளின் பிரச்சனை குறித்து, அவசரமாக ஒரு சுகாதார அமைச்சரை நியமிக்குமாறு ககாசன் செஜ்தேராவின் பாஸ்-நட்பு கூட்டணி, பிரதமர் முகிதீன் யாசினை வலியுறுத்தியுள்ளது.

Parti Ikatan Bangsa Malaysian (Ikatan)/பார்ட்டி இகாடன் பாங்ஸா மலேசிய (இகாடன்) இளைஞர் எக்ஸ்கோ டாக்டர் ஆர்.ஆர்.ராம்லி இன்று இதை கூறினார். ஒரு வார கிளர்ச்சிகளுக்குப் பிறகு, புதிய அரசாங்கம், அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும். நோய் பரவுவதை தடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

“ஒரு சுகாதார அமைச்சரை நியமிப்பது ஒரு முக்கிய அங்கமாக மாற்றப்பட்டு, துரிதப்படுத்தப்பட வேண்டும். போதுமான நிதி, தார்மீக மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி உதவுவதற்கும், அதோடு தொடர்புடைய அமைச்சகங்களிடையே சுமுகமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும் முனைய வேண்டும்”.

“இந்த சுமை அரசு ஊழியர்களின் தோள்களில் வைக்கப்படக்கூடாது. ஒரு நிர்வாகி, பொறுப்பை வகிக்க வேண்டும். இந்த பொறுப்பை ஏற்க தயாராக இருக்க வேண்டும்” என்று ராம்லி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறிய 11 நாட்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களில் 21 புதிய நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராம்லி குறிப்பிட்டார். பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 50 வரை உயர்ந்துள்ளது.

“இது ஒரு அதிவேக அதிகரிப்பு. புதிய பாதிப்புகளில் இருந்து வெளிப்பட நம் நாடு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதல்ல என்பதைக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடுகளை அங்கீகரிப்பதை புதிய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக அரசாங்க மருத்துவமனைகளுக்கு அதன் நிதிக்கு கூடுதலான சுமையை எதிர்கொள்ள இது உதவுகிறது என்று ராம்லி மேலும் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றதிலிருந்து, முகிதீன் தனது புதிய அமைச்சரவையை அமைப்பதைக் இன்னும் குறிப்பிடவில்லை. கோல சிலாங்கூர் எம்.பி. டாக்டர் சுல்கிப்லி அகமதுவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிப்பது குறித்து பரிசீலிக்க நெட்டிசன்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு இருந்தபோதிலும் முகிதீன் தரப்பிலிருந்து எந்த ஒரு செயல்பாடும் இல்லை.