கோவிட்-19: 26-வது பாதிப்புடன் மேலும் ஐந்து பாதிப்புகள்

கோவிட்-19: 26-வது பாதிப்புடன் மேலும் ஐந்து பாதிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன

நாட்டில் மேலும் ஐந்து கோவிட்-19 பாதிப்புகளை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. ஆக, இன்று நண்பகல் வரை மொத்தம் 55 பாதிப்புகளாக உள்ளது.

ஐந்து பாதிப்புகளும் 26-பாதிப்புக்காரர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்றுகளாக இணைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நபர் கசனா நேஷனல் மற்றும் ஊடா ஹோல்டிங்சின் மூத்த உறுப்பினர் என அடையாளம் கண்டுள்ளப்பட்டது.

மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலையில் நோய் பரவலைக் குறைக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க கோவிட்-19 கிளஸ்டர் செயற்குழு முடிவு செய்துள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.