ஐ.ஜி.பி: Akta Perhimpunan Aman என்று ஒரு சட்டம் உள்ளது

ஐ.ஜி.பி: Akta Perhimpunan Aman என்று ஒரு சட்டம் உள்ளது

அமைதி பேரணி நடத்த, மெர்போக் மைதானம் அல்லது வேறு மைதானத்திலோ கூட அனுமதியளிக்க காவல்துறையினர் தயாராக இருப்பதாக ஐ.ஜி.பி. அப்துல் ஹமீட் பாடோர் கூறினார்.

“இங்கே, இந்த வக்கீல்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நான் அவர்களை சற்று புரிந்து நடந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சட்ட துறையை சார்ந்தவர்கள். காவல்துறை உங்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்”.

“நீங்கள் ஒன்றுகூட விரும்பினால், அனுமதியுடன் மெர்போக் மைதானத்தில் கூடுங்கள் அல்லது ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுங்கள். அங்கே, மலேசியர்களாக உங்கள் கருத்துக்களைக் கூறலாம்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய அரசாங்க மாற்றங்களால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக எஸ்.அம்பிகா மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீரின் மகள் மரினா உட்பட 18 ஆர்வலர்கள் போலிஸாரால் விசாரிக்கப்பட்டார்கள்.

மேலும் கருத்து தெரிவித்த ஹமீட், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் விதிமுறைகளை தெளிவாக மீறியதற்காக காவல்துறையினரால் அழைக்கப்பட்டதாகக் கூறினார்.

“நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தை மதிக்கிறோம், இந்த நாட்டின் மக்களுக்கு ஆர்ப்பாட்டம், பேரணி செய்வதற்கான உரிமை தொடர்பான அரசியலமைப்பு விதிகளை மதிக்கிறோம்”.

“ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்றம் Akta Perhimpunan Aman என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது, மக்கள் போராடும் உரிமையை நாங்கள் சுலபமாக நிர்வகிக்க உதவும் ஒரு சட்டமாக அமைந்துள்ளது”.

ஆகவே, பேரணிக்கு முன்னர், ஏற்பாட்டாளர்கள் நோட்டீஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்புப் பணியாளர்களை ஒருங்கிணைக்க வசதியாக இருக்கும், என்று அவர் கூறினார்.