அஸ்மினின் பிள்ளைகளுக்கு சம்மன்கள்

செலுத்தப்படாத விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிடம் கட்டணம் குறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் ஒரு பயண நிறுவனம் RM328,901 வழக்கு தொடர்பாக நீதிமன்ற சம்மனை இன்னும் அனுப்பவில்லை.

ஜனவரி 23 அன்று, வாதி YHA டிராவல் & டூர்ஸ் YHA Travel & Tours (M) Sdn Bhd, அஸ்மினின் பிள்ளைகளான பாரா ஷாஸ்லியானா, பாரா அபிபா, பாரா அமிரா மற்றும் முகமது அமீர் ஷாஸ்ரின் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்க்க கோலாலம்பூர் செஷ்சன் நீதிமன்றம் அனுமதித்தது.

ஜனவரி 23 தேதியிட்ட திருத்தப்பட்ட சம்மன்களின், அஸ்மினின் பெயர் மட்டுமல்லாமல், அவரது நான்கு பிள்ளைகளின் பெயர்களும் இணைக்கப்பட்டதாக பிப்ரவரி 17 அன்று மலேசியாகினி அறிவித்தது.

திருத்தப்பட்ட மனுவில், முதல் பிரதிவாதியான அஸ்மினிடைருந்து RM328,901 செலுத்தப்படாத பணத்தை கோரி வாதி YHA குற்றம் சாட்டுகிறது.

இன்று காலை நீதிபதி லைலாத்துல் ஜுரைடா ஹரோன் முன் வழக்கு நிர்வாக விசாரணையின் போது, YHA வக்கீல் ஆடம் யாப் நீதிமன்றத்தில், நான்கு புதிய பிரதிவாதிகளிடம் சம்மனை ஒப்படைக்க நேரம் தேவை என்று கூறினார்.

நீதிபதி மார்ச் 25ஐ வழக்கு நிர்வாகத்திற்கு நிர்ணயித்தார்.

சுமூக தீர்வை எட்டுவதற்கு இரு கட்சிகளும் ஏதேனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து கேட்கையில், ஜைத் தனது கட்சிக்காரர் அப்படி எந்த ஒரு கட்டளையும் கொடுக்கவில்லை என்றார்.

“நாங்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடர விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

அஸ்மின், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது அமைச்சக ஊழியர்களுக்காக விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் தங்குமிடங்களை YHA பதிவு செய்துள்ளது.