RON95 விலை 19 சென் குறைந்தது, RON97, 21 சென் குறைந்தது

RON95 விலை 19 சென் குறைந்தது, RON97, 21 சென் குறைந்தது

RON95 பெட்ரோலின் சில்லறை விலை இன்று நள்ளிரவில் இருந்து ஒரு லிட்டருக்கு 19 சென்கள் குறைந்து லிட்டருக்கு RM2.08-யிலிருந்து RM1.89 ஆக குறைந்தது.

RON97, 21 சென்கள் குறைந்துள்ளதாக நிதி அமைச்சு (MOF) இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. இதனால் அதன் விலை லிட்டருக்கு RM2.19 ஆக குறைந்துள்ளது.

டீசல் சில்லறை விலை, லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து RM1.96 ஆக குறைந்துள்ளது.

கோவிட்-19 வெடிப்பு குறித்த கவலைகள் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனாவின் எண்ணெய் தேவையும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்துள்ளது.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஒபெக்) விலைகளை உயர்த்தும் முயற்சியில் கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.