கோவிட்-19 பரவுதல் குறித்து பேரரசர் கவலை தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதில் மலேசியர்கள் தங்கள் பங்கைச் செய்யுமாறு பேரரசர் யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட இஸ்தானா நெகாராவின் அறிக்கையில், நேற்று நாட்டில் பதிவான கொரோனா வைரஸின் 28 புதிய பாதிப்புகள் குறித்து அகோங் தனது கவலையை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
இதுதொடர்பாக, வைரஸ் பரவலை விரைவாகவும் திறம்படவும் கட்டுப்படுத்த உதவும் வகையில், புதிய நோயாளிகளின் விசாரணைகள் மற்றும் தொடர்புத் தடங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு அமைச்சகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு பேரரசர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
“ஏதேனும் கவலைகள், கேள்விகள் அல்லது தகவல் தேவைப்பட்டால், சுகாதார அமைச்சின் வலைத்தளத்தின் மூலம் அல்லது நெருக்கடி மற்றும் பதிலளிப்பு மையத்தை Crisis Preparedness and Response Centre (CPRC) அணுகுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், அமைச்சகம் வழங்கும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அகோங் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
- பெர்னாமா