கோவிட் -19: மலேசியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை 93ஆக அதிகரித்துள்ளது
கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19 இன் 10 புதிய பாதிப்புகள் இப்போது மொத்தம் 93 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, அனைத்து 10 பாதிப்புகளும் “33-வது நோயாளி” உடன் தொடர்புடையவை. அவர் 58 வயதான ஆண், பிப்ரவரி 16 அன்று ஒரு கூட்டத்திற்காக கூச்சிங்கிற்கு பயணம் செய்துள்ளார்.
புதிய நோயாளிகளில் நான்கு பேர் 33-வது நோயாளி உடனான முதல் கட்ட பரவலின் போது நெருங்கிய தொடர்புகளின் இருந்துள்ளனர். இப்போது இரண்டாம் கட்டத்தில், மேலும் 6 பேர் நெருங்கிய தொடர்புகளில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
33-வது நோயாளி, 26-வது நோயாளியான கசானாவின் நிர்வாக இயக்குனர் ஹிஷாம் ஹம்தானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
ஹிஷாம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தாலும், அதற்கு பொருப்பானவர் அவர் இல்லை என்றுள்ளார்.
இவருடன் மொத்தம் 132 நெருங்கிய தொடர்புகள் இருப்பதாவும், அவர்களில் 18 பேர் கோவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.
இதற்கிடையில், 78-வது நோயாளி பிப்ரவரி 13 தொடங்கி ஏழு நாட்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றதாக பதிவு வைத்திருப்பதாகவும், பிப்ரவரி 19 முதல் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா இதுவரை நான்கு கோவிட்-19 தொற்றுள்ள நோயாளிகளை அறிவித்துள்ளது. ஆனால் பாதிப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற கவலைகள் எழுந்துள்ளன.